குட் நியூஸ்.. இந்தியாவில் சில வாரங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி.. ஒரு டோஸ் மட்டும் போதும்
டெல்லி: சிங்கிள் டோஸ் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை இப்போது உச்சத்தில் உள்ளது. நாட்டில் இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இருப்பினும், நாட்டில் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல மடங்கு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போது வரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அவரசக்கால அடிப்படையில் வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதாவது அந்த தடுப்பூசிகள் வெளிநாட்டில் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தால் போதும். இந்தியாவில் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதம் இறக்குமதி
இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு தேவையான அனுமதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் & ஜான்சன் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு மருத்துவ குப்பிகளில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

Array
கொரோனாவுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் செயல்திறன் சுமார் 66%ஆக உள்ளது. இது மற்ற தடுப்பூசிகளைவிடக் குறைவு என்றாலும்கூட ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி சற்று முக்கியமானது. ஏனென்றால், மற்ற தடுப்பூசிகளுக்கு எல்லாம் 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டாம் டோஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரே டோஸ் மட்டுமே போதும். இதனால் அதிகளவிலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications