மருத்துவ சோதனை.. அமெரிக்கா செல்லும் சோனியா, ராகுல்.. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் பாதி நாட்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க உள்ளது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும்.

Sonia and Rahul will miss half of the Monsoon Session as they go to USA for Medical Checkup

மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும். இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாதி நாட்கள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக இவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று சோனியா காந்தி அமெரிக்கா சென்ற நிலையில், மழைகால கூட்டத்தொடரில் பாதி நாட்கள் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் அமெரிக்காவிற்கு செல்கிறார். இதனால் அவரும் கூட்டத்தொடரில் பாதி நாட்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சோனியா காந்தி கடந்த மாதமே அமெரிக்காவிற்கு மருத்துவ சோதனை செய்ய சென்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவரின் பயணம் ஒத்திப்போனது குறிப்பிடத்தக்கது. சரியாக அமெரிக்கா செல்லும் முன் காங்கிரஸின் அதிரடி மாற்றங்களை சோனியா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகுலுக்கு நெருக்கமான நபர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக பேசிய முக்கிய தலைவர்கள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+