பாஜகவின் அடுத்த தலைவர் யார்? சுனில் பன்சால் டூ அனுராக் தாகூர் வரை.. லிஸ்ட்டில் 5 ‛டாப்’ தலைவர்கள்
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தான் பாஜகவின் அடுத்த தேசிய தலைவராக யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அந்த பொறுப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் முதல் 6 முக்கிய தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அமித்ஷாவுக்கு பிறகு பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு முதல் அவர் அந்த பொறுப்பு வகித்து வருகிறார். பாஜக தேசிய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுக்கானது. ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2022ல் முடிவடைந்த நிலையில் மேலும் 2 ஆண்டுகள் அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் கடந்த பிப்வரியில் முடிவுக்கு வர இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கியதால் பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க மேலிடம் விரும்பவில்லை. இதனால் 4 மாதங்கள் வரை ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி அவரது பதவிக்காலம் ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் 240 தொகுதிகளில் வென்று மத்தியில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் ஜேபி நட்டா இணைந்துள்ளார். இவருக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை ஒரு நபருக்கு ஒரு பதவி என்பது நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் ஜேபி நட்டாவின் பாஜக தலைவர் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடையும் நிலையில் அவர் மத்திய அமைச்சராகி உள்ளார். இதனால் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஜேபி நட்டாவுக்கு பதில் பாஜகவின் புதிய தலைவராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணைந்துள்ளனர். சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய விவசாயத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு மத்திய கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவின் புதிய தலைவர் யார்? என்பது தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் புதிய தலைவர் பொறுப்புக்கு 6 முக்கிய தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது. அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
சுனில் பன்சால்: பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக இருப்பவர் சுனில் பன்சால். இவர் உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். கடந்த 2014ல் அமித்ஷாவுடன் சேர்ந்து உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். அப்போது 80 லோக்சபா தொகுதிகளில் 72 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதன்பிறகு 2017 சட்டசபை தேர்தலில் சுனில் பன்சால் பொறுப்பாளராக செயல்பட்டு பாஜகவை அரியணை ஏற வைத்தார். அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜகவை உத்தர பிரதேசத்தில் 62 தொகுதிகளில் வெல்ல வைத்தார். இவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவர்.
மேலும் மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களின் பொறுப்பாளராக பன்சால் செயல்பட்டார். அங்கும் பாஜகவை வளர்த்தார். இதில் தற்போது ஒடிசாவில் 10 லோக்சபா தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. அதேபோல் சட்டசபை தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் இவரது பெயர் முன்னிலையில் உள்ளது. அதோடு ஆர்எஸ்எஸ் பிரசாகராக இருந்து பாஜகவுக்கு வந்த இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் ஆதரவு அதிகளவில் உள்ளது பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
வினோத் தாவ்டே: மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் வினோத் தாவ்டே. இவரும் பாஜகவின் தேசிய பொது செயலாளராக உள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்து அரசிலுக்கு நுழைந்தவர். இவர் மகாராஷ்டிரா அமைச்சராக செயல்பட்டவர். பேசுவதற்கு எளிமையான மனிதராக இருக்கும் இவர் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர்.
தற்போது பீகார் மாநிலத்தின் பொறுப்பாளராக உள்ள அவர், லோக்சபா தேர்தலின் போது பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். பிரசா யுக்திகளில் கைதேர்ந்தவர். இவர் மகாராஷ்டிராவில் உள்ள மாரத்தா பிரிவை சேர்ந்தவர். இடஒதுக்கீட்டுக்கா மாரத்தா பிரிவினர் தற்போது போராடி வருகின்றனர். இதனால் அந்த போராட்டத்தை அமைதிப்படுத்தும் வகையிலும், இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும் வினோத் தாவ்டேவை பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஓம் பிர்லா: நரேந்திர மோடியின் 2.0 ஆட்சியில் லோக்சபா சபாநாயகராக செயல்பட்டவர். ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பின் பின்புலம் கொண்ட இவர் கோட்டா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்பியாகி உள்ளார். இவர் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் நல்ல உறவு வைத்துள்ளார். இதனால் ஓம்பிர்லாவின் பெயரும் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளது.
ஓம் மாதூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர்களில் ஒருவர் ஓம் மாதூர். இவர் ஆர்எஸ்எஸ் பிரசாகராக இருந்து கட்சி பணியை செய்தார். அதன்பிறகு பாஜகவில் குஜராத், உத்தர பிரதேசத்தில் பிரசார திட்டங்களை சிறப்பாக கையாண்டார். குறிப்பாக சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் கடந்த ஆண்டு பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட்டாக பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் ஓம் மாதூர் தான். இவர் அங்கு தேர்தல் பணியை பொறுப்பில் இருந்து பாஜகவினரை ஒருங்கிணைத்து செயல்பட்டது கவனிக்கத்தக்கது.
அனுராக் தாகூர்: இவர்கள் தவிர முன்னாள் அமைச்சர் அனுராக் தாகூர் பெயரும் பாஜகவின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ஜேபி நட்டாவைபோல் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் தான் அனுராக் தாகூர். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை நிர்வகித்து வந்தார். பாஜகவில் இளைஞர் அணியின் தேசிய தலைவராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். மேலும் தற்போதைய இளம் தலைவர்களில் அனுராக் தாகூருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனால் மீண்டும் அவர் மத்திய அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு பாஜகவின் தேசிய தலைவர் பதவி வழங்கப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications