ஜாக்பாட்.. 70,000 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்குகிறார் பிரதமர்.. 44 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 70,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஏழாவது ரோஜ்கர் மேளாவில் இந்த பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவே, ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த வருடம் அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிவைத்தார்.

Super announcement and central government job orders PM Modi issues today for 70000 people

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் 7-வது ரோஜ்கர் மேளா திருவிழா இன்று நடைபெறுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், "மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு 22.07.2023 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்றவுள்ளார்.

ஆட்சேர்ப்புகள்: நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா எனப்படும் ரோஜ்கர் மேளா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன.

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியில் சேரவுள்ளனர்.

முன்னுரிமை: வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த ரோஸ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் அமைந்துள்ளன. ரோஸ்கர் மேளாக்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும்.

இளைஞர்களுக்கு அதிகாரமளித்து தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இது வழங்கும். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி இணையதளத்தில் உள்ள இணையதளப் பயிற்சித் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெறுவார்கள். அதில் 580 க்கும் மேற்பட்ட மின் கற்றல் தொகுப்புகள் எங்கிருந்தும் எந்த சாதனத்தின் மூலமும் கற்றல் என்ற வடிவத்தில் கிடைக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணி நியமன கடிதம்: அதன்படி, மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, காணொலி வாயிலாக இன்று பணி நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார்.

நாடு முழுவதும் இருந்து அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுப்பட்டிருப்பவர்கள், வருவாய்த் துறை, நிதிச் சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் பணிக்கு சேரவுள்ளனர்.

புதிய வசதி: நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. அப்போது நாடு முழுவதும் 44 இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள். அதேபோல, புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், கர்மயோகி பிராரம்ப் ஆன்லைன் திட்டத்தின் மூலம் சிறப்பு பயிற்சி பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+