டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.. தமிழிசை வரவேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக கூறி, ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வெளியானததையடுத்து, காலை முதல் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் தீர்ப்பு வெளியானதும், தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newest First Oldest First
4:19 PM, 18 Feb

முகிலன் மாயமான விவகாரத்தில் சென்னை கமிஷனர் விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு போலீஸே காரணம் என ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன்

கடந்த 15-ஆம் தேதி மதுரைக்கு ரயில் மூலம் சென்றவரை காணவில்லை

முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

3:22 PM, 18 Feb

ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு

இனிப்புகள் கொடுத்தும், சிறப்பு வழிபாடுகள் செய்தும் மக்கள் கொண்டாட்டம்

11:58 AM, 18 Feb

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

தமிழக அரசின் ஆணையை ஏற்று தீர்ப்பு வரவேற்கத்தக்கது

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி

11:11 AM, 18 Feb

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக கைகளுக்கு கிடைக்கவில்லை

மீண்டும் மதுரை ஹைகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம்

ஸ்டெர்லைட் ஆலையின் சிஇஓ ராம்நாத் டெல்லியில் பேட்டி

10:57 AM, 18 Feb

நீதிமன்றம் என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ

ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் உண்மைகளை மறைத்தது - வைகோ

ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக தமிழக அதிமுக அரசு செயல்பட்டது - வைகோ

10:54 AM, 18 Feb

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு
10:54 AM, 18 Feb

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு- தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் ஷர்மா

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு செல்லத்தக்கது இல்லை

ஸ்டெர்லைட்டை மூட பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை செல்லுபடியாகும்

அரசியல் சாசன அமர்வுதான் தமிழக அரசின் அரசாணை தொடர்பாக விசாரிக்க முடியும்- உச்சநீதிமன்றம்

10:36 AM, 18 Feb

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிரான வழக்கில் அதிரடி

ஆலையை திறக்க கோரும் வேதாந்தா குழுமம் கோரிக்கை நிராகரிப்பு

10:21 AM, 18 Feb

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் தூத்துக்குடியில் பாதுகாப்பு அதிகரிப்பு

அதிகாலை 4 மணி முதல் தூத்துக்குடி முழுக்க போலீஸ் குவிப்பு

10:15 AM, 18 Feb

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீீர்ப்பு

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது

Supreme court to deliver verdict over Sterlite factory - Live updates

English summary
Supreme court to deliver verdict over Sterlite factory reopen issue on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X