Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய சிக்கல்! பொன்.மாணிக்கவேல் மீதான புகார்.. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி அவர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

சிலை கடத்தல் வழக்கு தொடர்புடைய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குப் பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வுபெற்ற ஐஜி ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் பொன். மாணிக்கவேல். இவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாட்சா என்பவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்,

அதில் பொன்.மாணிக்கவேல் பதவியில் இருந்த போது, சிலைக் கடத்தல்காரர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அவர் மீது புலன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்குத் தொடுத்திருந்தார்.

பொன்.மாணிக்கவேல்

பொன்.மாணிக்கவேல்

வழக்கு தொடர்ந்து இருந்த காதர் பாட்சா இதே பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் இதில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த புலன் விசாரணைக்குத் துணை ஐஜி அல்லது உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்கவும் உத்தரவிட்டது.

விசாரணை

விசாரணை

பதவியில் இருந்த போது பொன்.மாணிக்கவேல் பல்வேறு சிலைகளை மீட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் மீதான இந்த புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட் அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனு கடந்த நவ.24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

வாதம்

வாதம்

அப்போது இந்த வழக்கு விசாரணையில் பொன்.மாணிக்கவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நாகமுத்து, "சிலை கடத்தல் தொடர்பான விவகாரம் உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வின் கண்காணிப்பில் நிலுவையில் உள்ளது. இதில் எதிா்மனுதாரர் (காதர் பாட்சா) தாக்கல் செய்த மனுவை உரிய முறையில் பரிசீலிக்காமல் உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது தவறு என்பதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

எதிர் மனுதாரரின் வழக்கறிஞர், டிவிஷன் அமர்வில் உள்ள விவகாரத்திற்கும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் தொடர்பு இல்லை என விளக்கமளித்தார். மேலும், இதில் மனுதாரர் (காதர் பாட்சா) மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் இது தொடர்பான உண்மை விவரங்களை சிபிஐ விசாரணை மூலம் கண்டறிவது அவசியமாகும் என்றும் வாதிட்டார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்குத் தடை கோரிய பொன்.மாணிக்கவேல் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

மறுப்பு

மறுப்பு

மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்கத் தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதார் காதர் பாட்ஷாக்கும் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தை சிபிஐ இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில், அந்த அமைப்பையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது பொன்.மாணிக்கவேல் தன் மீதான விசாரணைக்கு மீண்டும் தடை கோரினார். இருந்த போதிலும், சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+