ஏன் ஒரு நாள் கூட உள்ளே இருக்க முடியாதோ... சரவணபவன் ராஜகோபாலுக்கு நீதிபதிகள் சுளீர் கேள்வி
Recommended Video
டெல்லி: ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா என சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. அதோடு அவர் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் சரவணபவன் ஒன்றாகும். இதன் உரிமையாளர் ராஜகோபால். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் தனது உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். இவர் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மென்மேலும் மேன்மை அடையலாம் என ஜோதிடர்கள் கூறியிருந்தனர்.

கொலை
இந்த நிலையில் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்தார் ராஜகோபால். பின்னர் கடந்த 2001-ஆம் ஆண்டு கொடைக்கானலில் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டு ராஜகோபாலின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டார்.

55 லட்சம் அபராதம்
இதை முதலில் ராஜகோபால் மறுத்த போதிலும் கடத்தியவர்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார். இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 55 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இதில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரணடைய கெடு
இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடையவும் கெடுவிதித்தது.

விசாரணை
ஆனால் இவர் சரணடையவில்லை. தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாக காரணம் காட்டி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.

ராஜகோபால்
அப்போது நீதிபதிகளிடம், தனக்கு சிறப்பு மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் வீட்டு உணவை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது என்றும் நரம்பு தளர்ச்சி நோய் உள்ளதாகவும், தான் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றும் அவர் சிறைக்கு செல்ல விரும்பாததை பல வழிகளில் ராஜகோபால் கூறிபார்த்தார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி
ஆனால் நீதிபதிகளோ, உங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை அனுபவிக்க தயாராகாமல் உடல்நிலையை காரணம் காட்டுகிறீர்கள். தண்டனையை அனுபவிக்கக் கூட நீங்கள் விரும்பவில்லை. ஏன் ஒரு நாள் கூட சிறையில் இருக்கக் கூடாதா என கடுமையான கேள்விகளை எழுப்பி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications