அதிர்ச்சி.. சாகிற வயசா அது.. சுஷாந்தை போலவே ஃபேனில் தூக்கு போட்டு தொங்கிய 2 தீவிர ரசிகர்கள்
சுஷாந்த் தற்கொலையை ஜீரணிக்க முடியாமல் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர்
டெல்லி: "சாகற வயசா அது.. மனசே ஆறலையே" என்று புலம்பி புலம்பியே சுஷாந்தின் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. நடிகர் சுஷாந்த் எப்படி இறந்தாரோ, அதேபோல ரூமில் ஃபேனில் தூக்கில் தொங்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சுஷாந்த் சிங் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.. இந்தியா முழுவதும் இந்த இளம் நடிகரின் மரணம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிலும் தமிழக மக்களையும் இந்த மரணம் தாக்கி உள்ளது மிகப்பெரும் வியப்பாக உள்ளது.

ஒரு இந்தி நடிகர் என்பதையும் தாண்டி எத்தனை பேர் இவரை விரும்பி உள்ளனர் என்பது இந்த மரணத்துக்கு பிறகுதான் பகிரங்கமாக தெரிந்தது.. தோனி படத்தில் நடித்தார் என்பதால் மட்டுமல்லாமல்.. அடிப்படையிலேயே சுஷாந்த் நல்ல மனிதராக இருந்திருக்கிறார்.
தன்னுடைய ஆசைகள் என்று இவர் குறித்து வைத்துள்ள அந்த 50 விஷயங்களே அதற்கு சாட்சி.. இத்தனை லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளவர், ஒருவரிடம்கூடவா மனசுவிட்டு பேச முடியாமல் போய்விட்டது? அப்படி என்னதான் பிரச்சனை இவருக்கு? எதுவுமே புரியவில்லை. ஆனால் தீர்க்கமாக முடிவு செய்துதான் இந்த தற்கொலையை அரங்கேற்றி உள்ளார்.. இது சம்பந்தமான விசாரணை ஒரு பக்கம் நடந்தும் வருகிறது.

ஆனால் அவரது ரசிகர்களும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இந்த அதிர்ச்சியிலேயே உள்ளனர்.. இவரது சொந்தக்காரர் பெண் ஒருவர் சுஷாந்த் உடலை எரித்துவிட்டனர் என்பதை அறிந்து சாப்பிடாமல் இருந்து, அப்படியே உயிரையும் விட்டுள்ளார்.
அதேபோல, ஒடிசாவின் கட்டாக்கில் 13 வயது சிறுமியும் 55 வயது நபர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. அந்த மாணவி 9ம் வகுப்பு படித்துள்ளார்.. சுஷாந்த் இறந்ததில் இருந்தே கடுமையான அதிர்ச்சியில், மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.. இந்நிலையில்தான் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதேபோல, கட்டாக்கில் 55 வயது ரசிகர் ஒருவர் தன்னுடைய ஆபீஸ் ரூமில் தற்கொலை செய்து கொண்டார்.. ஜகத்சிங்பூரைச் சேர்ந்த அவரது பெயர் நிரஞ்சன் ரூட் என்று சொல்லப்படுகிறது.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.. உயிரிழந்த 2 பேருமே சுஷாந்தை போலவே ஃபேனில் தூக்கு போட்டு இறந்துள்ளனர்!
இதனிடையே, சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது வீட்டிலிருந்து 5 டைரிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. தற்கொலை பற்றி எதுவுமே அவர் எழுதி வைக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்போது, டைரி கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் அவர் சந்தித்த பிரச்சனைகள், அல்லது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications