தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சி! ஒரு சீட் கூட இல்லை! பாஜகவுக்கு 4 சீட்- டிவி 9 எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 35 சீட்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களில் வெல்லும் என்று டிவி 9 எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில் இந்த முறை மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த 1.5 மாதங்களாக நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடைபெற்று வந்தது. முதலாம் கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடந்தது..

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சியால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். எந்தவொரு கட்சியும் 272 இடங்களைப் பெறவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமையும். கடந்த 2004, 2009இல் காங்கிரஸ் இதுபோல கூட்டணி ஆட்சியை அமைந்திருந்தது.

இந்த முறை நமது நாட்டில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக இப்போது பல்வேறு ஊடகங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி டிவி 9 சேனலும் இப்போது மாநிலம் வாரியாக தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்கள் வரை வெல்லும் என டிவி 9 கூறியிருக்கிறது. இதில் பாஜக கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்கும் என்று டிவி 9 தனது எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் கடந்த 2021 வரை ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று டிவி 9 சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+