நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருவதால் அதை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியவில்லை.

Tamilnadu Government files new petition for opposing Neet Exam for Tamilnadu

இதனால் கேள்விகளை மாநில பாடத்திட்டத்திலிருந்து கேட்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எனினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்தநிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் புதிய சட்டத்திருத்தத்தால் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதம் நடைபெற உள்ள இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (ஜன.6) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+