தினசரி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் உயிரிழப்பு.. ஷாக் தரும் இந்தியா
டெல்லி: உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99,804 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 3,44,64,456 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை
10,27,042 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 25,647,795 பேர் குணமடைந்தனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 77,89,619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 7,494,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 63,91,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் 48,49,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை 1,185,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா மரணங்கள் என்று பார்த்தால் உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 212,660 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2வது அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 144,767 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99,804 ஆக உயர்ந்துள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1096 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 920 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 805 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஒரு நாள் பாதிப்பில் உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் கொரோனா தொற்றால் 81,693 பேர் பாதிக்கப்பட்டனர். 2வது அதிகபட்ச பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது, அங்கு ஒரே நாளில் 47,309 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசலில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 35,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications