2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. சில நிமிடங்களில் முடங்கிய ஆர்பிஐ வெப்சைட்
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரிசர்வ் வங்கியின் இணையதளம் முடங்கியது. அதிகப்படியாக மக்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல முயன்றதால் இணையதளம் செயலிழந்துள்ளது.
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வமாக அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். தேவைப்படுகிற அளவில் பிற மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017ல் வெளியிடப்பபட்டன. மார்ச் 2018ன் படி 6.73 லட்சம் கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது 37.3 சதவீதம் என்கிற அளவில் புழக்கம் இருந்தன. ஆனால் 2023 மார்ச் 31ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கிறது.
2000 ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் 2000 ஆயிரம் அளவிற்கு கொடுத்து 500 ரூபாய் அல்லது 200 அல்லது 100 ரூபாய் என எக்ஸேஎன்ஞ்ச் செய்து கொள்ளலாம் என்றும், வரும் மே 23ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் இது நடைமுறைக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ஏராளமான மக்கள் வந்தனர். ஊடகங்களில் வந்த செய்தி உண்மை தானா என்று பார்ப்பதற்காக வந்தவர்களால், ரிசர்வ் வங்கியின் இணையதளமே செயல் இழந்தது.

ஆர்பிஐ இணையதளமே முடங்கி காணப்படுவதால் யாரும் உள்ளே சென்று செய்தி உண்மை தானா என்பதை அறிய முடியாமல் தவிக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஆர்பிஐ வெப்சைட்ட பார்க்க நினைப்பதால் முடங்கி உள்ளதாக தெரிகிறது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த செய்தியின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப்பில் அறியலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications