“மீடியா ஒன்” மலையாள சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கியது உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மலையாளத்தில் பிரபலமான மீடியா ஒன் செய்தி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தடையை தற்காலிகமாக நீக்கி உள்ள உச்ச நீதிமன்றம் சேனல் அதன் ஒளிபரப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் மிகப் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான மீடியா முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு தடை விதித்தது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டியலிலிருந்து மீடியாவும் நீக்கப்பட்டதால் ஒளிபரப்பு சேவையும் நிறுத்தப்பட்டது.

மீடியா ஒன் சேனல்

மீடியா ஒன் சேனல்

மீடியா ஒன் தொலைக்காட்சியின் சார்பில் சேனலுக்கு உரிமத்தை புதுப்பிக்கக் கோரி கடந்த ஆண்டே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலை உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மறுத்துவிட்ட நிலையில், ஒளிபரப்பும் முடங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு ஆதரவு கொடுத்ததாகவும் கடந்த 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து இந்த சேனல் ஒரு தலை பட்சமாக செய்து ஒளிபரப்பியதாக மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் சேனல் முடக்கப்பட்ட நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சேனல் வாதம்

சேனல் வாதம்

இந்த மனுவை கேரள நீதிமன்றம் விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது. இதை அடுத்து மீடியா ஒன் சேனல் நிறுவனத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மத்திய அரசு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒளிபரப்புக்கு அனுமதி

ஒளிபரப்புக்கு அனுமதி

ஏற்கனவே தொலைக்காட்சியை நம்பி 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் , ஒளிப்பதிவாளர்கள், உள்ளிட்ட பலர் பணியாற்றி வரும் நிலையில் மத்திய அரசின் முடிவால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் மீது மத்திய அரசு விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு சேனல் ஒளிபரப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+