சிறப்பு வரவேற்பு.. கூட்டணி கட்சிகளுடன் மீட்டிங் நடத்திய மோடி.. கவனம் பெற்ற இபிஎஸ், ஓபிஎஸ், பிரேமலதா!

டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.

TN CM and Deputy CM participated in PM Modis meeting with NDA allies

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார்.

பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களும் கூட்டணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

TN CM and Deputy CM participated in PM Modis meeting with NDA allies

அதன்படி மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இவர்கள் டெல்லியில் தங்குவதற்கு பாஜக சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் டெல்லியில் கூட்டம் நடக்கும் பாஜக அலுவலகத்தில் இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து இந்த கூட்டத்தில் பெரிய அளவில் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

கேரளா, ஆந்திர பிரதேசத்தில் இருந்து இங்கு பெரிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதனால் தமிழக தலைவர்கள் அங்கு அதிக முக்கியத்துவம் பெற்றார்கள். மேலும் இந்த கூட்டத்தில் இந்த விருந்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+