யுஜிசி நெட் தேர்வு திடீர் ரத்து.. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.. சிபிஐ விசாரணைக்கு ஆணை
டெல்லி:டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் அதன் பரபரப்பான பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு (UGC NET Exam) என்பது மத்திய கல்வி அமைச்சகம் மேற்பார்வையில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நெட் தேர்வில் பாஸ் செய்யும்பட்சத்தில் துணை பேராசிரியர் பணியை பெற முடியும். அதுமட்டுமின்றி ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோ ஷிப் மூலமாக மாத நிதி உதவி பெற்று முனைவர் பட்டம் பெறலாம். இதனால் ஆராய்ச்சி படிப்பு பயில்வோர் மற்றும் துணை பேராசிரியர் பணியை விரும்புவோர் இந்த தேர்வை அதிகம் எழுதி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு என்பது நாடு முழுவதும் நேற்று நடந்தது. நேற்று 2 ஷிப்டுகளாக நடந்தது. இந்நிலையில் தான் இந்த தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு என்பது இன்று இரவு மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் யுஜிசி நெட் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய தேர்வு முகமையால் டத்தப்பட்டும் யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் ஜுன் 18ம் தேதி (அதாவது நேற்று) நடத்தப்பட்டது. 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. இந்நிலையில் தான் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு சென்டரின் தேசிய சைபர் க்ரைம் த்ரெட் அனலிட்டிக்ஸ் யூனிட்டில் இருந்து ஒரு தகவல் பல்கலைக்கழக மாநில குழுவுக்கு சென்றது.
தேர்வு செயல்முறையின் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி யுஜிசி நெட் ஜுன் 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வு மீண்டும் நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும். மேலும் இதுதொடர்பாக விசாரணை என்பது மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. '' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தேர்வு ரத்து தொடர்பான காரணத்தை மிகவும் டெக்னிக்கல்லாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் பூதாகரமாகி உள்ளது. இதனால் நெட் தேர்வு ரத்து தொடர்பான காரணத்தை வெளிப்படையாக கூறாமல் மத்திய கல்வி அமைச்சகம் மறைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதைய நெட் தேர்வு ரத்துவுக்கு முக்கிய 2 விஷயங்களில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது ஒன்று நெட் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து இருக்கலாம். இல்லாவிட்டால் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்து இருக்கலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் காரணமாக தான் யுஜிசி நெட் 2024 தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications