ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... அமைச்சர்கள் எண்ணிக்கையை 53-லிருந்து 81-ஆக உயர்த்த முடிவு..!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 2-வது முறையாக வெற்றிபெற்றது. அப்போது 53 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மத்தியில் பாஜக அரசு 2-வது முறையாக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடந்துள்ள நிலையில் இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெற முடியும் என்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து பதவிகள் பறிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வரும் சூழலில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
இதனிடையே இந்திராகாந்தியின் பேரனும் சஞ்சீவ் காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தரப்படும் என டெல்லி வட்டாரங்கள் உறுதிபடக் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications