இனி 10 நிமிட டெலிவரி கிடையாது.. ஸ்விக்கி, ஜோமட்டோ, பிளிங்கிட்க்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: பொதுமக்களுக்கு ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, ஜோமட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி என்பதை கைவிட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இப்போது வீட்டில் இருந்தபடியே பிடித்த உணவு முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இன்று கிராமம் வரை விரிவடைந்துவிட்டது.

ஸ்விக்கி, ஜோமட்டோ, பிளிங்கிட், ஜெப்டோ, அமேசான், பிளிப்கார்ட் என்று பல நிறுவனங்கள் இந்த துறையில் கால்பதித்து செயல்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் இடையே கடும் போட்டி உள்ளது.
இந்த போட்டியை சமாளிக்கவும், கஸ்டமர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் 10 நிமிட டெலிவரி என்ற முறையை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. அதாவது எங்களிடம் ஆர்டர் செய்தால் அடுத்த 10 நிமிடத்தில் டோர்டெலிவரி செய்யப்படும் என கூறி கஸ்டமர்களை நிறுவனங்கள் தங்கள் வசம் இழுக்கின்றன. இதனால் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய ஊழியர்கள் சாலைகளில் வேகமாக டூவீலர்களில் செல்வதும், விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நிமிட டெலிவரி என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தான் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்வடவியா டெலிவரி நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஸ்விக்கி, ஜோமட்டோ, பிளிங்கிட், ஜெப்டோ உள்பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த சமயத்தில், ‛‛ஆன்லைனில் 10 நிமிட டெலிவரி என்ற விளம்பரங்களை நீக்கம் செய்ய வேண்டும். 10 நிமிடங்களில் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படும் என்பது ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதனால் கைவிட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
இதனால் வரும் காலத்தில் 10 நிமிட டெலிவரி என்பது இருக்காது என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து போராடிய டெலிவரி ஊழியர்களுக்கு ஸ்விக்கி, ஜோமட்டோ நிறுவனங்களில் டெலிவரிக்கான இன்செட்டிவ் தொகையை உயர்த்தி வழங்கியது.
இப்படியான சூழலில் தற்போது 10 நிமிட டெலிவரியை ரத்து செய்ய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்து இருப்பது ஊழியர்களுக்கு ஹேப்பியை வழங்கி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications