விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. அவரசமாக தரையிறங்கியதால் மத்திய அமைச்சரோடு தப்பிய 150 பேர்
டெல்லி: மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி, 2 பாஜக எம்எல்ஏக்கள் உள்பட 150 பேர் பயணித்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருப்பவர் ராமேஸ்வர் தெலி. இவர் இன்று மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு துறையை ராமேஸ்வர் டெலி நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து திப்ரூகருக்கு இண்டிகோ விமானத்தில் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி பயணம் செய்தார். அவருடன் அசாமை ஆட்சி செய்யும் ஆளும் பாஜக அரசின் எம்எல்ஏக்கள் பிரசாந்தா புகன் மற்றும் டீராஸ் கோவாலா ஆகியோர் விமான பயணம் செய்தனர்.

இவர்களுடன் மேலும் பயணிகள் இருந்தனர். விமானத்தில் மொத்தம் 150 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பயணித்த இண்டிகோ விமானம் அசாமின் கவுஹாத்தி நகரில் இருந்து திப்ரூகர் நோக்கி பறந்து சென்றது. இந்த வேளையில் திடீரென்று விமானத்தில் தொழில்நுட்க கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கி அனைவரும் காப்பாற்ற பைலட் முடிவு செய்தார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விமானம் அவசஅவசரமாக கவுஹாத்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் மத்திய அமைச்சர், ராமேஸ்வர் டெலி, 2 பாஜக எம்எல்ஏக்கள் உள்பட 150 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறுகையில், ‛‛இன்று எனக்கு துலியாஜன், டிங்கோங்க் மற்றும் டின்சுகியா ஆகிய இடங்களில் 3 மீட்டிங் இருந்தது. இதனால் நான் பாஜக எம்எல்ஏக்களான பிரசாந்தா புகான் மற்றும் டீராஸ் கோவாலா ஆகியோருடன் விமான பயணம் செய்தேன்.
திப்ரூகர் விமான நிலையத்தை நோக்கி சென்றபோது 20 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் கவுஹாத்திக்கு மீண்டும் வந்து அவசரமாக தரையிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.'' என்றார்.












Click it and Unblock the Notifications