டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊடுருவிய கொரோனா.. இனி வரும் நாட்கள் தான் இந்தியாவுக்கு சவாலானவை.. எச்சரிக்கை தேவை

Google Oneindia Tamil News

டெல்லி: ஒருவர் இருவர் என இருந்த நாடுகளில் அடுத்த சில வாரங்களில் பல ஆயிரம் பேரை கொரானா பாதித்துள்ளது. எனவே இந்தியாவில் 100க்கணக்கான பேருக்கு கொரோனா பரவி உள்ளதால் இனி வரும் நாட்கள் தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிகவும் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100 நாட்களுக்குள்ளாக 100 நாடுகளுக்கு பரவி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 164000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6500 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    வெறும் மூன்று பேருக்கு இருந்த கொரோனா வைரஸ் இத்தாலியில் அடுத்த சில வாரங்களில் பல ஆயிரம் பேருக்கு பரவி விட்டது. 2வது வாரத்தில் 152 ஆகவும் 3வது வாரத்தில் 1036 ஆகவும், 4வது வாரத்தில் 6362 ஆகவும், 5வது வாரத்தில் 21157 ஆகவும் உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ்.. பிலிப்பைன்ஸின் லூசன் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 5.7 கோடி மக்கள் கொரோனா வைரஸ்.. பிலிப்பைன்ஸின் லூசன் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 5.7 கோடி மக்கள்

    ஸ்பெயின், தென் கொரியா

    ஸ்பெயின், தென் கொரியா

    இதேபோல் தான் ஸ்பெய்ன் மற்றும் தென்கொரியாவிலும் ஒருவருக்கு முதலில் பரவிய கொரோனா அடுத்த சில நாட்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பரவி விட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் முதுலில் 2 நபர்களை தாக்கியது. அடுத்த 2 வாரத்தில் 105 ஆகவும், 3வது வாரத்தில் 613 ஆகவும் பாதித்தது. அதன்பிறகு தற்போது 3700 பேரை பாதித்துள்ளது. சுமார் 70 பேர் அங்கு இறந்திருக்கிறார்கள்.

    அபாயகரமான கட்டம்

    அபாயகரமான கட்டம்

    அந்த வரிசையில் இந்தியாவில் முதல் வாரத்தில் 3 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது வாரத்தில் 24 ஆக உயர்ந்தது. 3வது வாரத்தில் தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட் நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அபாயகரமான 3ம் கட்டத்தில் இந்தியா இருப்பதாக கணிக்கப்படுகிறது. எனவே 1000களையோ அல்லது 10 ஆயிரங்களையே அதிவேகமாக எட்டும் நிலைக்கு வாய்ப்பு உள்ளது.

    அவசர நிலை ஏன்

    அவசர நிலை ஏன்

    இதையடுத்தே மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அவசர நிலை அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. எனவே அரசின் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து அறிறவுரைகளை பின்பற்றினால் தான் இந்தியாவில் கொரோனா வைரஸை விரட்டுவது எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் கொரோனாவை விட்டுவது மிகவும் சவாலானதாக மாறிவிடும்.

    கைகளை கழுவுங்கள்

    கைகளை கழுவுங்கள்

    எனவே அடுத்த 30 நாட்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சோப்பு போட்டு நன்றாக கைககளை கழுவாமல் கண், மூக்கு, வாய், உள்ளிட்ட உறுப்புகளை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. சுய சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முக்கியமாக கொரோனா குறித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பக்கூடாது. அதை நம்பி மக்களிடையே பீதியை உருவாக்கக்கூடாது.

    English summary
    up comming days most important days over stop to spread coronavirus in india. becasue now 3rd week in india after spred coronaviurs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X