யோகி ஆதித்யநாத் பெஸ்ட் முதல்வர்.. 40% உ.பி.மக்கள் கருத்து.. இந்தியா டுடே சுவாரசிய கருத்துக்கணிப்பு
Recommended Video

டெல்லி: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகிழ்ச்சி அடைவதற்குப் ஒரு காரணம் கிடைத்துவிட்டது.
யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த மாநில மக்கள் இன்னும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்தியா டுடே டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பு.
இந்தியா டுடே மற்றும் 'கார்வி இன்சைட்ஸ்' அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய 'தேசத்தின் மனநிலை' என்ற கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

யோகி ஆதித்யநாத் செல்வாக்கு
உத்தரபிரதேச மக்களில் 40% பேர் நாட்டிலேயே, யோகி ஆதித்யநாத்தான் சிறந்த முதலமைச்சர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

ஆதரவு அதிகரிப்பு
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'தேசத்தின் மனநிலை' என்ற பெயரில் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சிறந்த முதலமைச்சர் என்று 30 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இந்த எண்ணிக்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் தற்போது அதிகரித்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டதாகும்.

அதிருப்தி
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். திருப்தி அடைந்துள்ளதாக 40 சதவீதம் பேரும், எந்த மாற்றமும் கிடையாது என்று 27 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதிருப்தியடைந்துள்ளதாக 12 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாக 3 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில், கருத்து தெரிவிக்க முடியாது என்று ஒரு சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மூன்றரை மதிப்பெண்
ஒட்டுமொத்தமாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு 5-க்கு 3.57 என்ற மதிப்பெண்களை உத்தரப்பிரதேச மாநில மக்கள் வழங்கியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் வரும் நிலையில் முக்கியமான உத்தரப்பிரதேசத்தில் அரசின் செல்வாக்கு இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications