விதவை மகளை 10 ஆயிரத்திற்கு விற்ற அப்பா... 20 பேர் பலாத்காரம் - தீக்குளித்த இளம் பெண்
உத்தரபிரதேச மாநிலத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு இளம் விதவை மகளை விற்பனை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியதால் மனம் நொந்த அவர் தீக்கு
டெல்லி: உடம்பு முழுக்க தீக்காயம்... நான் எரிந்து விட்டேன். இந்த உடலை யாரும் பலாத்காரம் செய்யமுடியாதில்லையா என்று எண்பது சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த இளம்பெண் ஈனஸ்வரத்தில் அளித்த வாக்குமூலம் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணின் பெயர் சுஷ்மா. இது கற்பனை பெயர்தான் என்றாலும் இளம்பெண் என்பதற்கு பதிலாக சுஷ்மா என்று சொல்வது ஈஸியாக இருக்கும் என்பதால் அந்த பெயர் வைத்திருக்கிறோம்.

மீரட் அருகே ஹாபூர் கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மாவிற்கு அம்மா இல்லை அப்பாவும் சித்தியும் மட்டுமே. சித்தி கொடுமை அனுபவித்த அவளுக்கு 14வயதிலேயே திருமணமாகிவிட்டது. வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போனது. கணவன் மரணமடைந்து விடவே மீண்டும் அப்பாவின் வீட்டிற்கு வந்தார்.
சிறுமி என்றும் பார்க்காமல் ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்து விட்டனர். அடிமையாக வாங்கிய அந்த நபரோ பலரது வீட்டுக்கு சுஷ்மாவை வீட்டு வேலைக்கு அனுப்பினார். வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் கயவர்கள் பலர் பலாத்காரம் செய்தனர். கொடுமையான சித்ரவதை நடந்தது.
பத்து வருடங்களாக இந்த கொடுமையை அனுபவித்த சுஷ்மா சமீபத்தில் தனது நிலை குறித்தும் தன்னை தொந்தரவு செய்பவர்கள் பற்றியும் ஹாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினரோ அவரது புகாரை கண்டு கொள்ளவில்லை. மனம் வெறுத்துப்போன அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் சுனில் என்ற நண்பன்தான். சுனிலிடம் தனது நிலையை கூறிய புலம்பிய சுஷ்மா திடீரென உடலில் நெருப்பு வைத்துக்கொண்டாள்.
எண்பது சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் கைவிட்டு விட்ட நிலையில் சுனில் மட்டுமே தற்போது சுஷ்மாவை கவனித்து வருகிறார். இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் புகார் அளிக்கவே, ஹாபூர் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையினர் சுஷ்மாவிடம் வாக்குமூலம் வாங்கும் போது தன்னை இனி யாரும் பலாத்காரம் செய்ய முடியாது என்று கூறினாள்.












Click it and Unblock the Notifications