Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலர்!" புகழ்ந்த பிரதமர்.. பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டின் பேரரசர் சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசு சார்பில் இன்று தபால் தலை வெளியிடப்பட்டது. நாட்டின் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் இந்த தபால் தலையை வெளியிட்டார். நீதியை நிலைநாட்டுவதில் உறுதியுடன் செயல்பட்டவர் பெரும்பிடுகு முத்தரையார் என புகழ்ந்த பிரதமர் மோடி, தமிழ்க் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக பெரும்பிடுகு முத்தரையார் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர் பேரரசர் சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையர். ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட இவர், முத்தரையா் இன முதல் பேரரசர் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23ம் தேதி அவரது நினைவைப் போற்றும் வகையில் முத்தரையா் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

Vice Presz Releases Postal Stamp Honouring Perumbidugu Mutharaiyar PM Hails Tamil Culture Guardian

கோரிக்கை

இந்தாண்டு அவரது 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போதே தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தியிருந்தனர். இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலையை வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதியான நிர்வாகி, வீரமிக்க போர்வீரர், கலை மற்றும் விவசாயத்தின் பாதுகாவலராகப் போற்றப்படும் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு அமைச்சர் மெய்யநாதன் கடிதத்தை எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, பெரும்பிடுகு முத்தரையருக்கு இன்று தபால் தலையை வெளியிட்டது.

தபால் தலை

நாட்டின் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) நினைவுத் தபால் தலையை இன்று டெல்லியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை பாராட்டினார்.

பாராட்டு

மேலும், காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியா 'விக்சித் பாரத்' நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி

இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன.

நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+