மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.. தேர்தல் முடிவால் அமித்ஷா உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்தீஷ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் மாநிலம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

 victory of the peoples unwavering faith in the leadership of Modi says Amit shah after BJP winning

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

அமித்ஷா கருத்து: 3 மாநில தேர்தல் முடிவினை அடுத்து பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்துள்ளார்.

அசைக்க முடியாத நம்பிக்கை: இது தொடர்பாக அமித்ஷா கூறியிருப்பதாவது:- ஆதரவு அளித்த தெலுங்கனா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தெலுங்கனாவின் வளர்ச்சி பாதைக்காக தொடர்ந்து உழைக்கும். மக்களின் ஆதரவுடன் தெலுங்கானாவை செழுமை மிக்க மாநிலமாக மாற்றுவோம். தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களுக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறினார்.

அதேபோல், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை ஆசிர்வதித்து வெற்றி அளித்த மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+