மீண்டும் வலுக்கும் போராட்டம்? மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு வாபஸ்! வினேஷ் போகத் பரபர புகார்..!
டெல்லி : இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக மாஜி எம்பியுமான பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை புகார் அளித்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் வீராங்கனைகளின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக பரபரப்பு புகாரினை அளித்துள்ளார் வினேஷ் போகத்.
மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பாக ஆறு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இந்திய மல்யுத்த சம்மேளமான டபுள்யுஎஃப்ஐ-யின் முன்னாள் தலைவருமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் தான் பதவியில் இருந்தபோது மல்யுத்த வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பரபரப்பு புகார் அளித்தனர்.

ஆனால் அவர் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை.. ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் போராட்டத்தில் குதித்தது தேசிய அளவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர்களான பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும், பிற அமைப்பினரும் களமிறங்கினர். மேலும், போராட்டத்தின் உச்சமாக இந்தியாவில் மிகப் பெரிய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டின் முன் இருந்த சாலையில் வைத்து விட்டு சென்றார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளானதைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகளை குண்டுக்கட்டாக கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு எடுத்த போதிலும் வீரர்களும் வீராங்கனைகளும் விடாப்பிடியாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரிட்ஜ் பூசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து கிரிமினல் வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பரபரப்பு புகார்களை அடுக்கி இருக்கின்றனர் மல்யுத்த வீராங்கனைகள். குறிப்பாக பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க இருந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை டெல்லி போலீஸ் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாக கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ரேஸ் அவன்யூ நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக டெல்லி அசிஸ்டன்ட் கமிஷனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறிய நிலையில், புகார் பொய்யானது எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறவில்லை தொடர்ந்து வழங்கப்பட்டது என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications