இந்தியாவை இனி தொட்டு பாருங்க.. புதின் - மோடி செய்யப்போகும் தரமான சம்பவம்! டிச. 4-5 தேதி இருக்கு
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4, 5 என 2 நாள் சுற்றுப்பயணமாக நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார். உக்ரைன் போர் மற்றும் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு முதல் முறையாக அவர் நம் நாட்டுக்கு வருகை தர உள்ள நிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். டிசம்பர் 4ம் தேதி இந்தியா வரும் விளாடிமிர் புதின் டிசம்பர் 5ம் தேதி மீண்டும் புறப்பட்டு செல்ல உள்ளார்.

இந்தியா வரும் விளாடிமிர் புதினை நம் நாட்டின் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரவேற்று டெல்லி ராஷ்ட்ரிய பவனில் விருந்து வழங்க உள்ளார். அதன்பிறகு டெல்லியில் இந்தியா - ரஷ்யா இடையேயான 23வது உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு பிரதமர் மோடி, புதின் ஆகியோர் தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச உள்ளனர்.
மேலும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு துறை சார்ந்து பல்வேறு ஒப்பந்தங்களை மோடி - புதின் ஆகியோர் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா வரும் விளாடிமிர் புதினிடம் கூடுதலாக எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்குவது பற்றி பிரதமர் மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு மொத்தம் 5 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்தது. 2018 ம் ஆண்டில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.40,000 கோடி) அளவுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 3 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா டெலிவரி செய்துவிட்டது. இந்த அமைப்புகளை பயன்டுத்தி தான் சமீபத்திய மோதலின்போது பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு நம் நாட்டின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இது 600 கிலோமீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ட்ரோன்களை கண்டுபிடித்து துல்லியமாக வானிலேயே அழிக்கும். எஸ் 400 அமைப்பில் இருந்து விரைந்து செல்லும் ஏவுகணை எதிரி நாடுகளின் போர் விமானம், ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும். கடந்த மே மாதம் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் இப்படித்தான் வீழ்த்தப்பட்டன.
இன்னும் 2 எஸ் 400 அமைப்பு பெண்டிங்கில் உள்ளது. உக்ரைன் உடனான போரின் காரணமாக இன்னும் அதனை ரஷ்யா நமக்கு டெலிவரி செய்யவில்லை. அடுத்த நவம்பர் மாதத்துக்குள் இதனை வழங்குவதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இப்படியான சூழலில் தான் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பின்போது கூடுதலாக 5 எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவது பற்றி பேச உள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எஸ்-400 வான்வெளி ஏவுகணை தடுப்பு சிஸ்டமை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 380 கிமீ தொலைவில் வானில் எதிரி ட்ரோன்களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ் 400 ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க விரும்புகிறது. இதுபற்றி விளாடிமிர் புதினுடன், மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தீர்ந்துபோன ஏவுகணை இருப்புக்களை நிரப்புவதையும், இந்தியாவின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி இந்த டீலை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டீல் சக்சஸ் ஆகும் பட்சத்தில் நம் நாட்டின் பாதுகாப்பு இன்னும் பலமாகும்.












Click it and Unblock the Notifications