Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2.35 லட்சம் மரணங்கள்.." நுரையீரல் பிரச்சினையை சாதாரணமா பார்க்காதீங்க! ரொம்ப கவனம் தேவை மக்களே

குறிப்பிட்ட சில அறிகுறிகள் இருப்பது நுரையீலில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் என்பதால் நாம் அந்த அறிகுறிகளை கவனமாக பார்க்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்வேறு காரணங்களால் நமது மற்ற உடல் உறுப்புகளைக் காட்டிலும் நுரையீரல் வேகமாகவே வயதாகி வருகிறது. இதனிடையே நுரையீரலில் சில குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால்.. அது மோசமான ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் மக்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்டவை நமது உடலையும் மிகப் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முன்பு சிலருக்கு மட்டுமே அரிதாக ஏற்பட்ட நோய்ப் பாதிப்புகள் கூட இப்போது வெகுவாக ஏற்பட்டு வருகிறது.

அதிலும் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இதனால் நுரையீரலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், இத்துடன் சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களும் சேர்ந்து கொண்டால் நிலைமை ரொம்பவே மோசமாகிவிடும்.

2.35 லட்சம் பேர் பலி

2.35 லட்சம் பேர் பலி

உடலின் மற்ற பாகங்களைப் போலவே, நுரையீரலும் மிக முக்கியமான உறுப்பு, இதற்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நுரையீரல் புற்றுநோயைத் தவிர்த்து நுரையீரலில் ஏற்படும் இதர நோய்களால் மட்டும் ஆண்டுக்கு 2.35 லட்சம் பேர் உயிரிழப்பு பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, நுரையீரலை நாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அது நமது உயிருக்கே மோசமான ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

காற்று மாசு, தூசி ஆகியவற்றைச் சுவாசிப்பது, புகைபிடித்தல் உள்ளிட்ட விஷயங்களால் உடலின் மற்ற பாகங்களை விட நுரையீரலுக்கு வேகமாக வயதாகிறது. காலப்போக்கில், நுரையீரல்கள் தங்கள் வலிமையை இழக்கின்றன, இது சுவாசிப்பதைக் கடினமாக்குகிறது. ஆனால் சில ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் வயதாகும் போது ஏற்படும் மூச்சுத் திணறல் பிரச்சினைகள் கணிசமாகக் குறையும்.

 சுவாச பிரச்சினைகள்

சுவாச பிரச்சினைகள்

உங்கள் உறுப்புகள் செயல்படத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க நமது உடல் சுவாச மண்டலத்தையே முழுமையாக நம்பியுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்.. உங்கள் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம்.. இதனால் உறுப்புகள் செயலிழந்து மிக மோசமான ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சுவாச பிரச்சனைகளின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, அதைச் சரி செய்து கொள்ள வேண்டியது ரொம்பவே முக்கியமாகும். இதில் எதாவது சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இப்போது பலருக்கும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுகிறது.. நுரையீரலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும். திடீரென அதிகமாக உடற்பயிற்சி செய்யும் போதும் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அது வழக்கமான ஒன்று தான் என்றாலும். திடீர் திடீரென ஏற்படும் மூச்சுத்திணறல் மோசமான அறிகுறியாக இருக்கலாம்.

என்ன மாதிரியான பாதிப்புகள்

என்ன மாதிரியான பாதிப்புகள்

நுரையீரல்கள் தான் நமது திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று.. கார்பன் டை ஆக்சைடை அகற்றி வருகிறது. இதில் ஏற்படும் பாதிப்பு சில நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். ஆஸ்துமா, கார்பன் மோனாக்சைடு பாய்சனிங், நுரையீரலில் அதிகப்படியான திரவம், சிஓபிடி, கோவிட்-19. நுரையீரல் கோலாப்ஸ், காசநோய், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், நுரையீரல் புற்றுநோய், குரூப், அனாபிலாக்ஸிஸ் உள்ளிட்டவை இதனால் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

நிறம் மாறும் சருமம்

நிறம் மாறும் சருமம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பவர்களின் சருமம் நீல நிறத்தில் இருக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.. இந்த நிலை சயனோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.. இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படுகிறது. சயனோசிஸ் நுரையீரல் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. உயரமான பகுதிகளுக்குச் செல்வது, ஆஸ்துமா, சுவாசப் பாதை தொற்று, நுரையீரலின் தமனிகளில் ரத்தக் கட்டிகள், சிஓபிடி, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நிமோனியா இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மார்பு வலி

மார்பு வலி

மார்பு வலி தொடர்ந்து ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக டாக்டரிம் செல்ல வேண்டும். ஏனென்றால் இது மோசமான நோயின் அறிகுறியாக இருக்கலாம். நுரையீரலில் ஏற்படும் அடைப்பு, அங்குத் தமனி நுரையீரல் திசுக்களுக்கு ரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம். நுரையீரல் மற்றும் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் காற்று கசியும் போது நுரையீரல் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மருத்துவரிடம் செல்லுங்கள்

மருத்துவரிடம் செல்லுங்கள்

நுரையீரல் தமனிகளில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் போது மார்பு வலியை உண்டாக்கும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும் போது உடனடியாக நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இல்லையென்றால் மோசமான நோய்ப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+