எல்லாமே வேஸ்ட்டா போயிடுச்சே.. சல்லி சல்லியாக நொறுங்கியது ஓபிஎஸ்ஸின் 8 அஸ்திரங்கள்.. என்ன நடந்தது?
பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது.
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதன் மூலம் அதிமுக மோதலுக்கு இன்றோடு மொத்தமாக தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில்தான் இன்றும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதிமுக பொதுகுழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக இன்னும் தேர்தல் ஆணையம் இதில் முடிவு எதையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். ஓபிஎஸ் இந்த வழக்கில் வைத்த வாதங்கள் எல்லாம் "வேஸ்ட்டாகி" உள்ளது. ஓபிஎஸ் நடத்திய போராட்டம் எல்லாம் சல்லி சல்லியாக நொறுங்கி உள்ளது.

வாதம்
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது. இந்த வாதங்கள் வழக்கிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து வைத்த வாதங்கள் பின்வருமாறு
இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்துவின் வழக்கறிஞர் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதங்கள் பின்வருமாறு,
1. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

என்ன சொன்னார்?
2. பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது.
3. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும். நான் கூட்டமால், நான் அனுமதி அளிக்காமல் பொதுக்குழுவை கூட்டி இருக்கவே முடியாது.

அங்கீகாரம்
4. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும். இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். ஆனாலும் இவர்கள் வேட்புமனு எல்லாம் தாக்கல் செய்து , எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்வானார்கள். இவர்களை தொண்டர்கள் தேர்வு செய்ததாகவே கருத வேண்டும். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

வழக்கு
5. அதிமுகவின் கட்சி விதி 42ன்படி உட்கட்சி முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றாக எடுக்க வேண்டும். அதாவது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்தில் இரண்டு பேரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். கட்சி நிதி சார்ந்த விவாகரங்களில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி கணக்கு வழக்குகளில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதில் இவர்கள் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். இருவரும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும்.

கட்சிக்கு உண்மையான தொண்டன்
6. நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது. கட்சிக்காக கடைசி வரை பாடுபட்டேன். ஆனால் என்னை கட்சியில் இருந்து நீக்கி அழுத்தம் கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் தவறானது.
7. பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கட்சி விதிகளை பார்க்காமல் தீர்ப்பு அளித்துள்ளனர்,
8. ஒருங்கிணைப்பாளரை இவர்கள் கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர். அந்த பதவிகளையும் நீக்கி உள்ளனர் என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்தது. இதை கேட்ட நீதிபதிகள் இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று விதி உள்ளதா.. அது என்ன விதி என்று கேட்டனர். அதற்கு வைரமுத்து தரப்பு, அதிமுகவின் கட்சி விதி 42 அது என்று கூறினார். இதையடுத்து ஓ இந்த 42 விதியில் இருவரும் ஒன்றாக ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும் என்று சொல்கிறதா? இந்த விதி சுவாரசியமாக இருக்கிறதே என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications