"ரூ.990 கோடி!" கொடுக்க ரெடியாக இருந்தும்! பூனவல்லாவுக்கு மும்பையில் அந்த வீடு கிடைக்கல! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீரம் நிறுவனத்தின் சேர்மேன் 82 வயதான சைரஸ் பூனவல்லா, இப்போது மத்திய அரசுக்கு எதிராக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவர் சைரஸ் பூனவல்லா. கொரோனா காலத்தில் கோவாக்சின் தயாரித்ததே இந்த சீரம் நிறுவனத்தின் சேர்மேன் தான் சைரஸ் பூனவல்லா.

சீரம் நிறுவனம் தான் இப்போது உலகில் அதிக மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. 82 வயதான சைரஸ் பூனவல்லா, இப்போது மத்திய அரசுக்கு எதிராக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

 சைரஸ் பூனவல்லா

சைரஸ் பூனவல்லா


இப்போதெல்லாம் பெரும்பாலான இந்திய தொழிலதிபர்கள் யாருமே மத்திய அரசு மீது அதிருப்தி இருந்தாலும் கூட எதையும் சொல்வதில்லை. ஆனால், சைரஸ் பூனவல்லா, 120 மில்லியன் டாலர் மதிப்புள்ள மும்பை மாளிகை விவகாரத்தில் எட்டு வருட மவுனத்தைக் கலைத்துள்ளார். அவர் மத்திய அரசு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மும்பையில் இருக்கும் அந்த அரண்மனை முன்பு மகாராஜா ஒருவருக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேலாக அது அமெரிக்கத் தூதரகம் வசம் இருந்தது.

 மும்பை குடியிருப்பு

மும்பை குடியிருப்பு

அரபிக்கடலின் கரையில் 2 ஏக்கர் பரப்பில் இந்த நிலம் அமைந்துள்ளது. நகரத்தின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு ஒப்பந்தமாக இரு பார்க்கப்பட்டது. இந்த குடியிருப்பை அமெரிக்க அரசிடம் இருந்து பூனாவல்லா வாங்கினார். இருப்பினும், அந்த அரண்மனை அமைந்துள்ள இடம் யாருடையது என்பதில் குழப்பமே நிலவி வருகிறது. மகாராஷ்டிரா அரசு, பாதுகாப்பு அமைச்சகம் என்று இரு தரப்பும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரிமை கோரின. இதனால் மத்திய அரசு, பூனாவல்லா- அமெரிக்க அரசு ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டது.

 8 ஆண்டுகளுக்குப் பிறகு

8 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த விவகாரத்தில் 8 ஆண்டுகள் அமைதியாக இருந்த பூனாவல்லா இப்போது முதல்முறையாக இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். துபாய் நாட்டில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்த ஒப்பந்தம் ஏன் நிறுத்தப்படுகிறது என மத்திய அரசு எந்தவொரு காரணத்தையும் கூறவில்லை. எனக்குத் தெரிந்த வரை, அவர்கள் இதை விரும்பவில்லை. சுமார் $120 மில்லியன் அமெரிக்காவிற்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. இது வெறும் அரசியல் ரீதியான மற்றும் சோசலிச முடிவு தான்" என்று அவர் தெரிவித்தார்.

 மத்திய அரசு

மத்திய அரசு

சைரஸ் பூனவல்லா தனது பேட்டியில் எந்தவொரு இடத்திலும் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், பொதுவாக பிஸ்னஸ்மேன்கள் யாரும் இப்போது மத்திய அரசின் முடிவுகளைக் கேள்வி எழுப்பும் வகையில் பேசுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாகப் பேசும் விலையில், சைரஸ் பூனவல்லாவின் இந்த கருத்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், மும்பை குடியிருப்பு விவகாரத்தில் எப்போது முடிவு கிடைக்கும் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 அமெரிக்கா

அமெரிக்கா

மும்பையின் தெற்கில் சொகுசு பங்களாக்கள் நிறைந்திருக்கும் ப்ரீச் கேண்டியில் தான் இந்த பங்களா இருக்கிறது. சீனா வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவுடன் நெருக்கமான உறவு அமெரிக்காவுக்கு முக்கியமாக இருக்கிறது. இதனால் அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சொத்தின் குத்தகை பரிமாற்றத்தை முடிக்கத் திருப்திகரமான ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க அரசு இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 லிங்கன் ஹவுஸ்

லிங்கன் ஹவுஸ்

லிங்கன் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை 1938 இல் வான்கனேர் மகாராஜாவால் கட்டப்பட்டது. இது 1957இல் அமெரிக்க அரசுக்கு 999 ஆண்டுக் குத்தகைக்கு விற்கப்பட்டது. பலரும் விசா கோருவதால் இங்கே இருந்த தூதரகத்திற்கு இட நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கத் தூதரகம் 2014இல் நகரின் வடக்கு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த இடத்தை விற்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அப்போது தான் பூனாவல்லாவின் குடும்பத்தினர் அதை வாங்க முன்வந்தார்கள்.

 மும்பையில் தொடரும் சர்ச்சை

மும்பையில் தொடரும் சர்ச்சை

இந்த லிங்கன் ஹவுஸைப் போலவே, மும்பையில் உள்ள மற்ற ஆடம்பர வீடுகளும் இதே போன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவால் கட்டப்பட்ட சவுத் கோர்ட் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், 1983 வரை, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் அதை வாடகைக்கு எடுத்தார். அதன்பின், பாகிஸ்தான் அரசு, ஜின்னாவின் மகள், இந்தியத் தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் தாயும் உரிமை கோரினர். இதனால் அதுவும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+