டிரம்பை எச்சரித்த மோடி.. ஜூன் 17 போன்காலில் நடந்த சண்டை.. இந்தியாவுக்கு 50% வரி போட்டதன் பின்னணி
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை போட்டுள்ளார். இதற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வரி விதிப்பின் பின்னணியில் ஜூன் 17 ல் டிரம்ப் - மோடி இடையே நடந்த போன் காலும், அப்போது டிரம்பை மோடி எதிர்த்து பேசியதும் தான் முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அந்த போன் காலில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த கச்சா எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. இது நம் நாட்டுக்கு சாதகமாக உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்பால் பொறுத்து கொள்ளவில்லை. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று டிரம்ப் கூறினார்.

மேலும் ரஷ்யா உடனான வர்த்தகத்தால் இந்தியாவுக்கு அபராதம், வரி என்று 25 சதவீதத்தை கடந்த 1ம் தேதி அறிவித்தார். அதன்பிறகு நேற்று இன்னொரு 25 சதவீத வரியை அறிவித்தார். இதன்மூலம் மொத்தம் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போடப்பட்டுள்ளது. இதில் 25 சதவீத வரி இன்று முதலும், அடுத்த 25 சதவீத வரி வரும் 27 ம் தேதிக்கு பிறகும் நடைமுறைக்கு வருகிறது.
ஜூன் 17ல் நடந்த போன்கால்
இந்நிலையில் தான் இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்புக்கு கடந்த 17 ம் தேதி நடந்த போன் கால் தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அது இஸ்ரேல் - ஈரான் போர் நடந்த சமயம். இதனால் கனடா சென்றிருந்த டிரம்ப் ஜி 7 மாநாட்டில் பாதியில் நாடு திரும்பினார்.
மோடி ஜி 7 மாநாட்டுக்கு செல்லும் முன்பே டிரம்ப் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்றார். இதனால் டிரம்ப் - மோடி இடையே நடக்க இருந்த சந்திப்புக்கு நடக்கவில்லை. இதையடுத்து டிரம்ப் - மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
டிரம்பை எச்சரித்த மோடி
டிரம்ப் - மோடி இடையே 35 நிமிடங்கள் வரை உரையாடல் நடந்தது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று சொல்லி வரும் டிரம்பின் கூற்றை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை. பொதுவாக எங்களுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையேயான பிரச்சனையில் மற்ற நாடுகளை தலையிட வைப்பது இல்லை. இதனால் உங்களின் கூற்றை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஜூன் 18 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் பிரதமர் மோடியை அமெரிக்கா வரவழைத்து அசீம் முனீர் - மோடியை சந்திக்க வைக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதனை டிரம்ப் வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும் டிரம்ப் அந்த திட்டத்தை மனதில் வைத்து மோடியை, அமெரிக்கா வந்து செல்லும்படி கூறினார். ஆனால் மோடி டிரம்பின் திட்டத்தை உணர்ந்து அமெரிக்காவுக்கு வர முடியாது என்று வெளிப்படையாக மறுத்துள்ளார்.
வரி போட்டு பழிதீர்க்க முடிவு
இது டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபமான டிரம்ப் இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். இதற்கு அவர் எடுத்த ஆயுதம் தான் வரி. வரியை எப்படி இந்தியாவுக்கு விதிக்கலாம் என்று அவர் யோசித்து வந்த நிலையில் தான் ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பயன்படுத்தி கொள்ள நினைத்தார்.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று கூறி இந்தியாவை சங்கடத்தில் தள்ளினார். இந்தியா மறுக்கும் என்பது டிரம்புக்கு நன்றாக தெரியும். இதனை பயன்படுத்தி நம் நாட்டுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படியே டிரம்ப் செயல்பட்டு இந்தியாவுக்கு 50 சதவீத வரியை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்ன நடந்தது?
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு கடந்த ஜூன் 15ம் தேதி காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டார். முதலில் அவர் இஸ்ரேல் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடான சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார் அதன்பிறகு அங்கிருந்து கனடா புறப்பட்டு சென்றார். கனடாவில் நடக்கும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். கனடாவில் இருந்து பிரதமர் மோடி குரேஷியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
கனடாவில் தான் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் ஜி 7 நாடுகளாக உள்ளன. இந்த மாநாட்டில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். டிரம்பும், மோடியும் சந்திக்க இருந்தனர். ஆனால் இஸ்ரேல் - ஈரான் மோதலால் ஜி 7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியில் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டார்.
குரேஷியா புறப்பட்டு சென்ற மோடி
இதையடுத்து பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் உரையாடினர். மொத்தம் 35 நிமிடங்கள் வரை இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது இந்த தொலைபேசி உரையாடலின்போது டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வரும்படி கூறினார். பிரதமர் மோடி தற்போது கனடாவில் உள்ளார். கனடாவும், அமெரிக்காவும் அண்டை நாடுகளாகும். இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் கனடா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா வரும்படி டிரம்ப் கூறினார்.
அதற்கு பிரதமர் மோடி மறுத்துவிட்டார். ‛‛கனடா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு குரேஷியா செல்கிறேன். ஏற்கனவே இதுபற்றி குரேஷியா நாட்டுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டேன். இதனை என்னால் மீற முடியாது. இதனால் அமெரிக்காவுக்கு வர இயலாது'' என்று பிரதமர் மோடி குரேஷியா புறப்பட்டு சென்றார். இந்த போன்காலில் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்கா தான் டிரம்ப் கூறியதற்கு மோடி எதிர்ப்பை பதிவு செய்து குரேஷியா நோக்கி பறந்தார். இது டிரம்பின் ஈகோவை ‛டச்' செய்ததால் அவர் இந்தயிாவை குறிவைத்து வரிகளை தீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications