ஏவுகணை தாக்குதல்.. பாகிஸ்தானை அலறவிடும் ஈரான்.. காரணம் என்ன? இந்திய உளவுத்துறை சொன்ன முக்கிய மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் மீது ஈரான் இன்று திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. ஏற்கனவே சிரியா, ஈராக்கில் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் மீதும் அதிரடியாக ‛அட்டாக்' செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதோடு மோதலுக்கான பின்னணி குறித்த முக்கிய தகவலை இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்.. அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்து வரும் தேசமாக இப்போது மாறியுள்ளது. இந்தியாவுடன் நீண்டகாலமாக பாகிஸ்தான் மோதி வருகிறது. எல்லையில் அடிக்கடி வாலாட்டி இந்தியாவின் பதிலடியை வாங்கி கட்டிக்கொள்கிறது. ஆனாலும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை.

What India intelligence says about Iran strikes militant bases in Pakistan? details here

இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதோடு, இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க மறுத்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கும் தற்போது குடைச்சல் கொடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் என்பது நடந்தது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று பாகிஸ்தான்-ஈரான் இடையே மோதல் என்பது தொடங்கி உள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக இருநாடுகள் மாறிமாறி குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த மோதல் தொடங்கியது. அதன்படி ஈரான் சார்பில் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பகுதியில் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது தான் இந்த தாக்குதல் என்பது நடந்துள்ளது. மொத்தம் 2 இடங்களை குறிவைத்து ஈரான் அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது. ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பு என்பது ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த அமைப்புக்கும், ஈரானுக்கும் நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது.

மேலும் இதற்கு முன்பு ஈரான் ராணுவத்தை குறிவைத்து இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சிரியாவில் ஈரான் தலையீடு இருக்கும் நிலையில் அதில் இருந்து பின்வாங்க வேண்டும் என தொடர்ந்து ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பு இப்போது பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் தான் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில் தான் ஈரானின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் சார்பில், ‛‛இந்த தாக்குதலை ஏற்கவே முடியாது. இதற்காக ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் என்பது நடந்தது. அதில் இந்த தாக்குதல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஈரான் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்து பதிலடி கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஈரான் சிரியா, ஈராக்கில் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான்-ஈரான் இடையேயான தாக்குதல் தொடர்பாக அங்குள்ள நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதுபற்றி மத்திய உளவுத்துறை தரப்பில் விசாரித்தபோது, ‛‛ஈரானின் இந்த நடவடிக்கை என்பது அவர்களின் உள்நாட்டு விவகாரம் சார்ந்தது. இருப்பினும் பாகிஸ்தான் என்பது பயங்கரவாத நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. மேலும் இஸ்லாமிய உலகமும் இப்போது பாகிஸ்தானை தாக்க தொடங்கி உள்ளது. தாலிபானுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான நாடாக இருக்கிறது. ஈரான், பாகிஸ்தானுக்கு பிறகு தான் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஈரானை இத்தகைய நடவடிக்கையை எடுக்க பாகிஸ்தான் தான் கட்டாயப்படுத்தி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+