Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழில் என்றால் என்ன? ஒன்றுகூடி விசாரிக்க போகும் 9 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்! ஏன் முக்கியம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "தொழில்" என்றால் என்ன.. அது எதைக் குறிக்கும்.. தொழிலாளர் சட்டங்களின் கீழ் தொழில் என்ற சொல்லை எப்படிப் பொருள் கொள்வது என்ற கேள்விக்குப் பதில் காணும் பணிகளில் இப்போது உச்ச நீதிமன்றம் இறங்கியுள்ளது. இந்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கவுள்ளது. 50 ஆண்டுக்காலச் சட்ட முன்மாதிரியை இது மறு ஆய்வு செய்யும்.

நமது நாட்டில் உச்சபட்ச நீதி அமைப்பாக சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. எந்தவொரு சிக்கலிலும் இறுதித் தீர்வை உச்ச நீதிமன்றமே வழங்குகிறது. அந்த உச்ச நீதிமன்றத்திலும் சில முக்கியமான சூழல்களில் அரசியலமைப்பு அமர்வு உருவாக்கப்படும். வழக்கமான அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகள் உள்ள சூழலில், அரசியலமைப்பு அமர்வில் 7 முதல் 13 நீதிபதிகள் வரை இருப்பார்கள்.

What is Industry 9 Judge Supreme Court Bench to Decide Why its important for Labor Laws in India

9 நீதிபதிகள் அமர்வு

ஒரு சட்டத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்போது அல்லது அரசியலமைப்பில் உள்ள ஒரு வார்த்தைக்கு விளக்கம் அளிப்பதில் சிக்கல் ஏற்படும்போது இந்த அமர்வு அமைக்கப்படும். அதன்படி இப்போது 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இப்போது அமைக்கப்பட்டுள்ளது. தொழில் என்றால் என்ன? தொழிலாளர் சட்டங்களில் தொழில் என்ற வார்த்தையை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு இந்த அமர்வு விடை காணும்.

இந்த அமர்வில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்ஜி, விபுல் எம். பன்சோலி உள்ளிட்டோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 17ம் தேதி இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்னதாக 1979களில் இந்த விவகாரத்தில் ஏழு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இந்தப் பரிந்துரை கோரப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் பொருளை இந்தத் தீர்ப்பே வகுத்திருந்தது. நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் எழுதிய 140-144 பாராக்களில் உள்ள சட்டக் கோட்பாடுகள் சரியானதா என்பதை அமர்வு மதிப்பிடும்.

பின்னணி

இதன் மூலம் பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளும் 'தொழில்' வரையறைக்குள் சேர்க்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு அப்போதே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இது அரசின் இறையாண்மை சார்ந்த பணிகள் வணிகச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குலைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

1975 தீர்ப்பைத் தொடர்ந்து ஒரு நிறுவனம் 'தொழில்' என்று தகுதி பெற "முத்தரப்பு சோதனை" உருவாக்கப்பட்டது. முறையான செயல்பாடுகள், முதலாளி- ஊழியர் ஒருங்கிணைப்பு, மனிதத் தேவைகளுக்கான பொருட்கள்/ சேவைகள் உற்பத்தி/ விநியோகம் ஆகியவை இருந்தால் ஒரு நிறுவனம் 'தொழில்' என வரையறுக்கப்படும். நடைமுறைக்கு வராத தொழில் தகராறு (திருத்த) சட்டம், 1982 தொடர்பாகவும் 2020 தொழிலாளர் உறவுகள் சட்டம் தொடர்பாகவும் இந்த அமர்வு ஆராயும்.

எப்போது?

இந்த வழக்கின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூடுதல் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளைத் தாக்கல் செய்ய அனைத்துத் தரப்பினருக்கும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஒருங்கிணைப்பு வழக்கறிஞர்கள், மனுக்கள், ஆவணங்கள், ஆதாரங்களின் புதிய தொகுப்புகளைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் மார்ச் 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க மூன்று மணிநேரம் வழங்கப்படும். பதில் வாதத்திற்கு ஒரு மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்றும் இதனால் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்

அரசியலமைப்பு அமர்வு இந்த விவகாரத்தில் என்ன தீர்ப்பு வழங்கும் என்பது உற்றுக் கவனிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இந்த வழக்கில் தரப்படும் தீர்ப்பு தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொது நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 'தொழில்' என்பதற்கு ஒரு குறுகிய வரையறை வழங்கப்பட்டால், அரசுத் துறை ஊழியர்களின் பாதுகாப்பு குறைவதற்கான வாய்ப்புள்ளது. மாறாக, 'தொழில்' என்பதன் விரிவான விளக்கமே மீண்டும் உறுதி செய்யப்பட்டால், பல்வேறு துறைகளில் வேலை செய்யும் ஊழியர் பாதுகாப்புகள் நீடிக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+