பைனலில் இறங்கும் தல தோனி படை.. ஐபிஎல் கோப்பையில் அது என்ன சமஸ்கிருதத்தில்.. அர்த்தம் என்ன தெரியுமா
டெல்லி: இன்றைய தினம் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே ஐபிஎல் கோப்பையில் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் குறித்து இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
உலகில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு கடந்த மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடங்கிய நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இதில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு லீக் சுற்றுப் போட்டிகள் பரபரப்பாகச் சென்றது. இதனால் புள்ளிப் பட்டியல் மிகவும் நெருக்கமாகவே இருந்தது. ப்ளே ஆப் சுற்றுக்கு யார் செல்வார்கள் என்பதே கடைசி நாளில் தான் தெரிய வந்தது.
ஐபிஎல் தொடர்:
குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் இதில் டாப் 4 இடங்களைப் பெற்றது. இதில் முதலாம் குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. லக்னோ, மும்பை அணிகளுக்கு இடையே நடந்த எலிமினேட்டரில் மும்பை வென்றது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு வந்தது.
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஐபிஎல் பைனல்ஸ் இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு கோலாகலமாக நிறைவு விழாவும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு சாம்பியன் பட்டமும் 20 கோடி ரூபாயும் காத்திருக்கிறது. அதேபோல இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி பரிசு கிடைக்கும்.
பரிசுத் தொகை:
மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு வந்த அணிகளுக்கும் தலா ரூ 7 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீரர், அதிக ரன் குவித்த வீரருக்கு ரூ.15 லட்சமும் வளர்ந்து வரும் வீரருக்கு ரூ.20 லட்சமும் அதிக மதிப்பு மிக்க வீரருக்கு ரூ.12 லட்சமும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதில் வெல்லும் அணியின் கேப்டனுக்கு ஐக்கானிக் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்.
கடந்த 2 மாதங்களாக 10 அணிகள் பல வீரர்கள் மல்லுக்கட்டியது இந்த ஐக்கானிக் ஐபிஎல் கோப்பைக்காகத் தான்.. அனைவரும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கோப்பையின் மையப்பகுதியில் சமஸ்கிருதத்தில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அது என்ன என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கான பதில் வெளியாகியுள்ளது.
என்ன அர்த்தம்:
அதாவது கோப்பையின் மையப்பகுதியில் சமஸ்கிருதத்தில் "Yatra Pratibha Avsara Prapnotihi" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், "திறமை வாய்ப்பை சந்திக்கும் இடம்" என்று அர்த்தமாகும். இது ஐபிஎல் தொடரை அப்படியே ஒரே வரியில் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
வளர்ந்து வரும் பல திறமையான வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் தான் ஊக்கமளிக்கிறது. பல வீரர்கள் ஐபிஎல் மூலம் கண்டறியப்பட்டு பட்டை தீட்டப்பட்டுள்ளனர். பல இளம் வீரர்களை அடையாளம் காணவும் பல மூத்த வீரர்கள் கம்பேக் கொடுக்கவும் ஒரு களமாக ஐபிஎல் இருந்துள்ளது. அப்படிப்பட்ட இந்த சொற்றொடரை மிகச் சரியாக இந்த வரி குறிக்கிறது.
பைனல்ஸ்:
இன்றைய தினம் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை, ஹரத்திக் பாண்டியாவின் குஜராத்தை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், இதில் 3இல் குஜராத்தும் ஒரு முறை சென்னையும் வென்றுள்ளன. இந்தாண்டு இரு அணிகளும் இரு முறை மோதியுள்ள நிலையில், இருவரும் தலா ஒரு முறை வென்றுள்ளன.

இந்தாண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டியில் சென்னை குஜராத் அணிகள் தான் கடந்த மார்ச் 31ஆம் தேதி மோதின. இதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரம் குவாலிபையரில் குஜராத்தை வீழ்த்தியது சென்னை. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் இரு அணிகளும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்குப் பஞ்சமிருக்காது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications