குழந்தைகளுக்கு உயிரே போகலாம்.. மோசமான "சோகிங்" பாதிப்பு! பெற்றோர்களே இந்த உணவில் கவனமாக இருங்கள்
டெல்லி: குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. எச்சரிக்கையுடன் இல்லையென்றால்.. குழந்தைகளுக்கு choking எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படும் மோசமான ஆபத்து உள்ளது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகளை வளர்க்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் வளர்க்க வேண்டும். அவர்கள் விளையாட்டு போலச் செய்யும் காரியங்கள் கூட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதிலும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது செரிமானம் அடையும்.. எது கொடுக்கக் கூடாது... காரம் உள்ளிட்ட மசாலாக்கள் எவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனை கொடுத்து வருகிறார்கள்.

சோகிங்
பொதுவாகவே சாப்பிடும் போது choking எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படுவது பயங்கரமான அனுபவமாக இருக்கும்.. நாம் உணவைச் சாப்பிடும்போது, எதாவது மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும். இதை யோசித்தாலே எவ்வளவு மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 4000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல உணவு சாப்பிடும் போது ஏற்படும் மூச்சுத் திணறலால் உயிரிழக்கிறார்கள். மனிதர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு யோசித்துப் பாருங்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்கவில்லை என்றால், உணவு சாப்பிடுவதே அவர்கள் உயிருக்கு மோசமானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

எந்த உணவு
நாம் சாப்பிடும் உணவு மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்வதால் தான், இந்த சோகிங் ஏற்படுகிறது. இதனிடையே எந்த வகையான உணவு அதிகப்படியான சோகிங் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து வல்லுநர்கள் கண்டறிந்துள்ளது. பொதுவாகத் திராட்சை போன்ற பொருட்களே அதிகம் சோகிங்கை ஏற்படுத்தும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் ஹாட்டாக் (hot dog sausages) என்ற பாஸ்ட் புட் தான் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்ற உணவுகளைக் காட்டிலும் ஹாட் டாக் என் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் விளக்கவும் செய்துள்ளனர்.

ஏன் ஏற்படுகிறது.
பொதுவாகக் குழந்தையின் சுவாசப் பாதை சிறியதாக இருக்கும். அந்த இடத்தில் ஹாட் டாக் முழுமையாகச் சென்று அடைத்துக் கொள்வதால் குழந்தைகள் மூச்சு விட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஹாட் டாக் உள்ளிட்ட இறைச்சிகளை ஒருபோதும் நாணயங்களைப் போல வெட்டக்கூடாது.. அதற்குப் பதிலாக, அது நீளமாகவே இறைச்சிகளை வெட்ட வேண்டும். அப்போது தான், அவை சுவாசப் பாதையில் சிக்கிக்கொண்டாலும் கூட, அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தாது. மேலும், குழந்தைகளுக்கு இறைச்சி போன்ற உணவைக் கொடுக்கும்போது ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமினால் என்ன செய்ய வேண்டும்
சாப்பிடும் போது குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், முதலில் பீதி அடையாமல் இருப்பது ரொம்பவே முக்கியம்.. பதறியடித்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. குழந்தைக்கு இருமல் இருந்தால், அப்படியே விடுங்கள். ஏனெனில் பல நேரங்களில் இருமும் போது சிக்கியிருக்கும் பொருள் வெளியே வந்துவிடும். இருப்பினும், இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றால் அல்லது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது தொடர்ந்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். மேலும், கீழ் கூறப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை எடுத்தும் சிக்கியுள்ள பொருளை வெளியே எடுக்க முயலலாம்.

என்ன செய்யலாம்
முதலில் சற்று கீழ்நோக்கி சாய்த்து தோள்பட்டைகளுக்கு நடுவை வலுவாக அடிக்கவும். இது சிக்கியிருக்கும் பொருட்களை வெளியே கொண்டு வர உதவும். முகம் நிலத்தில் படுவது போலப் படுக்க வைக்கவும். இருமல் எதாவது வந்தால் நன்கு இருமட்டும்.. அது உள்ளே சிக்கிய பொருளை வெளியே கொண்டு வரும்.. முன்னோக்கிச் சாய்த்து முதுகில் வலிமையாக ஐந்து அடிகளைக் கொடுக்கவும். வாயில் எதாவது இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.. ஆனால் வாயில் விரல்களை விடக் கூடாது.

மருத்துவமனை
குழந்தைக்குப் பின்னால் நின்று, வயிற்று மற்றும் மார்பின் அடிப்பகுதியில் கையை வைத்து வலிமையாக அழுத்தவும். அது பொருளை வெளியே கொண்டு வர உதவும். பெரும்பாலான நேரங்களில் இதைச் செய்தாலே.. உள்ளே சிக்கியிருக்கும் உணவுப் பொருள் வெளியே வந்துவிடும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கவும். மேலும், நோயாளி சுயநினைவை இழந்தாலோ CPR செய்யுங்கள்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications