டெல்லியில் "அவர்" வீட்டில் தங்கிய அண்ணாமலை.. கையில் என்னங்க அது? அப்போ அதிமுக.. மொத்தமா க்ளோஸ்?
டெல்லி: பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் கையில் கூடவே ஒரு ஃபைல் ஒன்றையும் கொண்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதிமுக பாஜக உச்சத்தில் உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள் காரணமாக அவருடன் உறவை முறித்துக்கொண்டு அதிமுக வெளியேறி உள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை மீது குற்றச்சாட்டு வைத்து கூட்டணியை முறித்து உள்ளார்
டெல்லி அழைப்பு; இப்படி கூட்டணி முறிந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி அழைக்கப்பட்டார். டெல்லியில் பின்வரும் சம்பவங்கள் நடந்து உள்ளன.
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித் ஷா, நட்டாவை ஞாயிற்றுக்கிழமையே சந்திக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார். ஆனால் அமித் ஷா 5 மாநில தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியவில்லை.
இதனால் மறுநாளும் அண்ணாமலை காத்திருக்க வேண்டி இருந்தது. கூடுதல் நாள் அங்கே அண்ணாமலை தங்க நேரிட்டதால் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் ஓய்வு எடுத்தார். அந்த நண்பர் தேஜஸ்வி சூர்யா எம்பி. டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் அண்ணாமலை தங்கி உள்ளார். இவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
ஃபைல்; அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் கையில் கூடவே ஒரு ஃபைல் ஒன்றையும் கொண்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஏன் வேண்டாம் என்பதை நியாயப்படுத்தும் விதமாக அண்ணாமலை இந்த ஃபைலை எடுத்து சென்றுள்ளார்.
அதிமுக கூட்டணி ஏன் தேவையில்லை. அதிமுக கூட்டணி இல்லாமலே பாஜக எப்படி வெல்ல முடியும். பாஜக வாக்கு வங்கி என்ன? பாஜக எப்படி கூட்டணி அமைக்க வேண்டும்? யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? என்பதை லிஸ்ட் போட்டு அண்ணாமலை பெரிய டேட்டாவுடன் கொண்டு சென்றுள்ளார்.
இதை அவர் அமித் ஷாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதேபோல் ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளார். நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் விஷயங்கள் குறித்து விசாரணை செய்துள்ளார்.
அதோடு நிற்காமல் அவர் தமிழ்நாடு பாஜக எப்படி உள்ளது? கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்தால் வெற்றிபெறுமா? அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் என்ன பலன்? என்ன பிரச்சனை என்பதை எல்லாம் ரிப்போர்ட்டாக டெல்லி அனுப்பி உள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையிடம் இதை பற்றி நிர்மலா சீதாராமன் விசாரணை செய்துள்ளாராம்.,
இந்த ரிப்போர்டுகளை பார்த்துதான் பாஜக தேசிய தலைமை இதில் பொறுமையாக முடிவு எடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications