Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெளியே சொல்ல வேண்டாம் என்றார்கள்.." அமித் ஷா உடனான மீட்டிங்கில் என்ன நடந்தது! பஜ்ரங் புனியா பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் வீரர்களில் ஒருவரான பஜ்ரங் புனியா இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்கள் கடந்த ஜன. மாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, மேரி கோம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

What Wrestler Bajrang Punia said about late night meeting with Amit Shah

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யவே சுப்ரீம் கோர்ட் வரை சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர வேண்டி இருந்தது.

போராட்டம்: இதனிடையே இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் வீரர்களில் ஒருவரான பஜ்ரங் புனியா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு அமித் ஷா உடன் நடந்த மீட்டிங் குறித்துப் பேச வேண்டாம் என்று போராடும் வீரர்களை அரசு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே உள்துறை அமைச்சரைச் சந்தித்தது குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் இருப்பினும் இந்தத் தகவல் எப்படியே வெளியே வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சமரசம் எதுவும் செய்யவில்லை என்றும் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். போராட்டத்தை அடுத்தகட்டமாக எப்படித் தீவிரப்படுத்தலாம் என்று வியூகம் வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்தி இல்லை: அவர் மேலும் கூறுகையில், "அரசு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதில் திருப்தியடையவில்லை. எங்களுக்குக் கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்கவில்லை. பிரிஜ் பூஷனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை.. அவரை ஏன் பாதுகாக்கிறீர்கள் என அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டோம். அது குறித்து ஆலோசித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார்,

ஆனால் வெறும் உறுதிமொழியை நம்பத் தயாராக இல்லை. கடந்த ஜன. மாதம் இப்படி தான் அரசு சொன்னதைக் கேட்டு போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால், அதன் பிறகு ஏதோ நாங்கள் பொய் சொல்கிறோம் என்பது போலச் சித்தரித்தார்கள்.

வேலையை விடத் தயார்: நாங்கள் ரயில்வே வேலைக்குத் திரும்புவதால் போராட்டத்தின் தீவிரம் குறையும் என்கிறார்கள். வேலைகளில் இருந்து விடுப்பு எடுத்தே போராடி வருகிறோம். டெல்லியின் ஜந்தர் மந்தர் போராட்ட தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரு நாள் மட்டும் வேலைக்குச் சென்றோம். அதன் பிறகு நாங்கள் பணிக்குச் செல்லவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் பணயம் வைத்துப் போராடுகிறோம்.. எங்கள் போராட்டத்திற்குத் தடையாக இருந்தால், எங்கள் அரசு வேலைகளை விட்டுவிடவும் தயாராக இருக்கிறோம்.

இது ஒரு பெரிய விஷயமல்ல.. வதந்திகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். எங்களை வேலையை வைத்து யாராவது மிரட்டினால் வேலையை விடவும் அச்சப்பட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் மைனர் சிறுமியின் தந்தை புகாரை வாபஸ் பெற்றுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அதெல்லாம் முழுக்க முழுக்க பொய்.. அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.

விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட 12, 13 பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையைப் பகிர்ந்து கொண்டனர், எப்ஐஆர் நிச்சம் பதிவு செய்யப்படும் என்றும் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், உண்மையில் எதுவுமே நடக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+