"செல்லாது!" உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் மாறுபட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ரவீந்திர பட்
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டு வழக்கில் தலைமை நீதிபதி உடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மட்டுமே மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.
EWS எனப்படும் இந்த Economically Weaker Sections இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

வழக்கு
ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதப்படுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்த போதே, இதற்குப் பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மத்திய அரசிலும் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதற்கிடையே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது,

தீர்ப்பு
இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுவதாக வாதிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் தலைமை நீதிபதி உடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மட்டுமே இதற்கு எதிரான தீர்ப்பை வழங்கினார். இருப்பினும் 3-2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரவீந்திர பட்
இதற்கிடையே மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரவீந்திர பட் யார் என நெட்டிசன்கள் கூகுள் பக்கம் திரும்பி வருகின்றனர். ரவீந்திர பட் கர்நாடக மாநிலம் மைசூரில் 1958இல் பிறந்தவர். டெல்லியிலுள்ள இந்து கல்லூரியில் ஆங்கில இளங்கலை படிப்பை முடிந்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கறிஞராகப் பணி செய்தார்.

மருந்து கட்டுப்பாடு
குறிப்பாக மருந்து கட்டுப்பாடு விவகாரத்தில் பொது நலன் கருதி மிகப் பெரிய மருந்து நிறுவனத்தின் தடை கோரிக்கை ஏற்க மறுத்தவர் நீதிபதி பட். அதேபோல வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் திருத்தம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த அமர்விலும் நீதிபதி பட் இடம் பெற்றிருந்தார். அதில் நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி வினீத் சரண் அளித்த தீர்ப்புக்கு ஒத்த கருத்தையே நீதிபதி எஸ்.ஆர். பட் தனது தீர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications