இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவு! அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்பு.. மேட்டரே வேற! பகீர் கனெக்ஷன் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் நடக்கும் சீன ஆதரவு பிரச்சாரத்திற்கும் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கும் இடையே ஒரு கனெக்ஷன் இருப்பதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சீனா உலகெங்கும் தனது கருத்துகளைப் பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா மீதான ஒரு நல்ல இமேஜை உருவாக்கவும், மற்ற நாடுகள் குறித்து தவறான செய்திகளைப் பரப்பவும் இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதன்படி இந்தியாவிலும் கூட சீன ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல அமெரிக்காவிலும் திடீரென பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அதிகரித்துள்ளது. இந்த இரண்டிற்கும் இடையே தொடர்பு உள்ளதாக இப்போது பரபர தகவல் வெளியாகியுள்ளது.
நெவில் ராய் சிங்கம்: அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் தான் அந்த தொடர்பு என்பதே இப்போது வெளியான ஷாக் தகவல். சமீபத்தில் பிரபல ஆன்லைன் செய்தி நிறுவனம் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கிலும் இந்த நெவில் ராய் சிங்கத்தை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
அதேபோல அமெரிக்காவிலும் இவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்த தி பீப்பிள்ஸ் ஃபோரம் என்ற அமைப்புடன் நெவில் ராய்க்கு இருந்த தொடர்பு காரணமாகவே அங்கும் இவர் சர்ச்சையில் சிக்கினார். அதாவது இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட அணிவகுப்புகள் இயற்கையானவை இல்லை என்றும் இந்த தி பீப்பிள்ஸ் ஃபோரம் என்ற மன்றத்தை அதை பின்னால் இருந்து நடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
யார் இவர்: நெவில் ராய் சிங்கம் என்பவர் மார்க்ஸிய சித்தாந்தம் கொண்ட நபர் ஆவார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதலே தி பீப்பிள்ஸ் ஃபோரத்திற்கு நிதியளித்து வருகிறார். பல்வேறு நிலையில் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் விளிம்புநிலை சமூகங்களையும் ஒன்றிணைப்பதை அதன் இந்த அமைப்பின் நோக்கமாகும். கடந்த 2017 முதல் 2022 வரை இவர் இந்த அமைப்புக்கு $20.4 மில்லியன் நன்கொடை அளித்துள்ளார். இந்த அமைப்பு தான் அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் நெவில் ராய்க்கு சீன அரசு ஊடக பிரிவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. அவர் இந்தியா உட்படப் பல நாடுகளில் சீன ஆதரவு பிரச்சாரத்தை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நெவில் ராய் இப்போது ஷாங்காயில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வழக்குப்பதிவு: கடந்த இண்டு மாதங்களுக்கு முன்பு வட இந்தியாவில் உள்ள ஒரு பிரபல செய்தி நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகாரிலும் நெவில் ராய் சிங்கத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது நெவில் ராய் சீன ஆதரவு கருத்துகளைப் பரப்ப நிதி அளித்தார் என்பதே அடிப்படை குற்றச்சாட்டாகும்.

நெவில் ராய்க்கு சீனாவில் இருக்கும் கம்யூனிச அரசு உடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் நிறுவனமும் அவர் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் நெவில் ராய் சிங்கம் தனக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சீன ஆதரவு கருத்துகளைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் அளிக்கும் நன்கொடைகளுக்கும் சீன அரசுக்கும் இடையே கனெக்ஷன்கள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
யார் இவர்: நெவில் ராய் சிங்கம் ஒரு அமெரிக்கத் தொழிலதிபர் ஆவார். இவர் அங்கே Thoughtworks என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் முக்கியமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
இவர் தான் இந்தியாவில் நடக்கும் சீன ஆதரவு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்காவில் நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கும் காரணமாக இருக்கிறார் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அவர் மீது தீவிர விசாரணை நடத்தி அவருக்கும் சீனாவுக்கும் இருக்கும் தொடர்பு எத்தகையது.. அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications