சத்தம் ஜாஸ்தியா இருக்கே? நீங்க பேசுறது தலைமை நீதிபதி முன்னாடி.. உச்சநீதிமன்றத்தில் ஜட்ஜ் போட்ட போடு
டெல்லி: சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி வழக்கறிஞரை கண்டித்திருக்கிறார்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கு தொடர்பான வாதத்தின்போது இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. உச்சநீதிமன்றத்தில் அப்படியென்ன நடந்தது.
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் முடிந்துவிடடது.. இது தொடர்பாக கோர்ட்டில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது... இந்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து விசாரிக்கிறது.

வழக்கு: இந்த வழக்கு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மருத்துவ மாணவி பலியான சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை கொல்கத்தா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடந்தது என்ன மாதிரியான விவரங்கள் தெரியவந்துள்ளன? இனி நடக்க போகும் விசாரணை என்ன? என்பவை உள்ளிட்ட விவரங்களை சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் மாநில அரசு சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள்: இதில், மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், 23 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கைகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை நேற்றைய தினம் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே பி பர்திவாலா ஆகியோர் விசாரித்து கொண்டிருந்தபோது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் சில கேள்விகளை எழுப்பினார்... குறிப்பாக, கவுஸ்தேவ் பக்சி என்ற வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.. (சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்தான் கவுஸ்தேவ் பக்சி)
வீடியோக்கள்: கபில் சிபல் வாதிடும்போது, "இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது, கவுஸ்தேவ் பக்சி என்ற வழக்கறிஞர் கற்களை வீசும் வீடியோக்களும், போட்டோக்களும் என்னிடம் இருக்கின்றன" என்று குற்றம் சாட்டினார்.
கபில் சிபல் இவ்வாறு சொல்லும்போது, கவுஸ்தேவ் பக்சியும் கோர்ட்டில்தான் இருந்தார்.. உடனே கபில் சிபல் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தார்... "நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர் எப்படி குற்றம்சாட்டலாம்" என்று கபில் சிபலை பார்த்து சத்தமாக கேள்வி எழுப்பினார்.
சத்தம் ஏன்: உடனே தலைமை நீதிபதி சந்திரசூட் தலையிட்டு, "ஏன் இவ்வளவு சத்தம்? முதலில் உங்கள் சத்தத்தை குறைக்க முடியுமா? நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது, தலைமை நீதிபதி முன்புதானே தவிர, பல்லாயிரக்கணக்கானோர் முன்பு கிடையாது..
உங்களின் நடவடிக்கையை கோர்ட்டில் கடந்த 2 - 3 மணி நேரமாக நான் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். கோர்ட்டுக்கு வெளியே பேசுவதைபோல், இங்கு வழக்காடு மன்றத்தில் பேசி கொண்டிருக்கிறீர்கள்?" என்று கோபமாக கூறினார். இதைக்கேட்டதுமே கவுஸ்தேவ் பக்சி, தலைமை நீதிபதியிடம் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications