மோடி என்றால் மோடி என்றே குறிப்பிடலாமே.. ஏன் இந்த கண்ணாமூச்சி?.. கடிந்துகொண்ட தலைமை நீதிபதி!
பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் பிரச்சாரம் தினமும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
முக்கியமாக பிரதமர் மோடி ஜாதி குறித்தும், மதம் குறித்தும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் இந்திய ராணுவத்தை தனது பிரச்சாரத்தில் விதிகளை மீறி பயன்படுத்தி வருகிறார்.

இல்லை
இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்து இருந்தது. ஆனால் இதுவரை பிரதமர் மோடிக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனு
இதையடுத்து காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நேற்று இவர் மோடியின் பேச்சு குறித்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இதை விசாரித்தார்.

யார்
இந்த வழக்கில் சுஷ்மிதா தேவ் சார்பாக வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி ஆஜராகி இருந்தார். இதில் இன்று சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.
வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி: தேர்தல் ஆணையம் இதுவரை காங்கிரஸ் அளித்த விதிமுறை மீறல் புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
தலைமை நீதிபதி கோகாய்: யாருக்கு எதிராக புகார் அளித்து இருந்தீர்கள்?
வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிராக புகார் அளித்தோம்.
தலைமை நீதிபதி கோகாய்: அதை வெளிப்படையாக சொல்ல மாட்டீர்களா? மோடி மீதான புகார் என்றால் மோடி என்று வெளிப்படையாக கூற மாட்டீர்களா? ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

என்ன விசாணை
இதன் பின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருவது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications