இது ஏன் ஒலிம்பிக்கில் இருக்க கூடாது? ஒரு கப் பாலில் மேஜிக் செய்த நபர்.. அசந்து போன ஆனந்த் மகிந்திரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக இது ஏன் ஒலிம்பிக்கில் விளையாட்டில் இருக்க கூடாது? என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. மகிந்திரா நிறுவனங்களின் சேர்மனாக இருக்கும் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக செயல்படக் கூடியவர். இவர் இணையத்தில் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் வைரல் ஹிட் அடித்துவிடும். இவரை சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் பாலோ செய்து வருகின்றனர்.

Anand Mahindra weird Trend

ஆனந்த் மகிந்திரா வீடியோ: அவர் போடும் சில பதிவுகளில் கருத்துக்களும் இருக்கும். சமூக அக்கறையோடும் சில பதிவுகளை பதிவிடுவார். அந்த வகையில் இன்று ஆனந்த் மகிந்திரா பகிர்ந்திருக்கும் வீடியோவானது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா.. இது ஏன் ஒலிம்பிக் விளையாட்டில் இருக்க கூடாது என்ற கேப்ஷனுடன் போட்டு இருக்கிறார்...

ஒரு சொட்டு சிதறாமல்: சில வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் தலைப்பாகை அணிந்த படி இருக்கும் ஒருவர் கையில் இரண்டு கப்களை வைத்து இருக்கிறார். அதில் ஒரு கப்பில் இருந்து மற்றொரு கப்பிற்கு பாலை ஆற்றுகிறார். அதாவது டீக்கடையில் மாஸ்டர்கள் சிலர் டீயை ஆற்றும் போதும் தங்கள் தனித்துவத்தை காட்டுவார்கள்..

எங்கே கீழே கொட்டி விடுமோ என பார்ப்பவர்கள் நினைத்தாலும் கூட, ஒரு சொட்டு சிதறாமல் அப்படியே டீயை ஆற்றி விட்டு வாடிக்கையளர்கள் கையில் கொடுப்பார்கள்... இதேபோன்றுதான்.. அந்த நபர் பாலை ஆற்றும் விதம் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. சுழலும் இருக்கையில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் கூட பேலன்ஸ் மிஸ் ஆகாமல் கச்சிதமாக பாலை ஆற்றுகிறார்.

ஒலிம்பிக் விளையாட்டு: எவ்வளவு உயரத்தில் வைத்து ஆற்றினாலும் அசராமல் வியக்க வைக்கிறார்.. இந்த வீடியோவை தான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இது ஏன் ஒலிம்பிக் விளையாட்டில் இருக்க கூடாது என்று போட்டு இருக்கிறார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..

நெட்டிசன்கள் கருத்து: இந்த போட்டியை ஒலிம்பிக்கில் வைத்தால் போட்டியே இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று விடும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் தங்கள் அர்ப்பணிப்பை காட்டினால் தனித்துவத்தை காட்ட முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம் என பல நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+