நிலக்கரி உற்பத்தி கிடுகிடு உயர்வு! ஆனாலும் பல மாநிலங்களில் மின்வெட்டு! ஏன், என்ன காரணம்? முழு விவரம்
டெல்லி: இந்தியாவில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருப்பதால்தான் மின் தட்டுப்பாடு நிலவுவதாக சொல்லப்படும் நிலையில் ஏப்ரல் மாதம் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தமிழகம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கோடை காலம் தொடங்கிய நிலையில் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநில அரசுகளை கேட்டால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலக்கரி வரவில்லை என்கிறார்கள். ஆனால் மத்திய அரசோ நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்கிறது.

தமிழகம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கிராமங்களில் மணிக்கணக்கில் மின்வெட்டு ஏற்படுகிறது. அக்னி நட்சத்திரம் தகிக்கும் முன்பே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்பெறும் நிலையில் இந்த மின்வெட்டால் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளார்கள்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் இரவு நேரங்களில் மக்களின் தூக்கம் கெட்டு போகிறது. மேலும் மின்சாரம் உதவியுடன் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அன்றாடம் கூலிக்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நிலக்கரித் துறை
இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் கூறுகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது இந்திய நிலக்கரி நிறுவனம் உற்பத்தி 27.2 சதவீதம் அதிகரித்திருந்தாலும் விநியோகம் என்பது 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. போதுமான நிலக்கரி இருக்கும் போதிலும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக சில மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன என தெரிவித்துள்ளது.

மின் தேவை
ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான மின் தேவை 207.11 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு 182 ஜிகா வாட்டாகவும் ஏப்ரல் 2020-ஆம் ஆண்டு 133 ஜிகா வாட்டாகவும் இருந்தது. இந்தியாவின் மின் தேவை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் தேவை உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மின் தேவை
பொதுவாகவே கோடை காலத்தில் மிக அதிகபட்ச மின் நுகர்வு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். ஒவ்வோரு ஆண்டும் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த ஆண்டு நிலக்கரி விலை அதிகரிப்பால் மின் தடங்கல் ஏற்பட்டு நிலைமை மோசமாகும் நிலை உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அனல் மின் நிலையங்கள் ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதியை கோர முடியாத நிலை உள்ளது. இதுவும் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறைக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.

நிலக்கரி வெட்டுதல்
நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு அந்த பணியை மேற்கொள்ள முடியவில்லை. பருவமழைக்கு முன்னதாக அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதும் இது போன்ற பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நிலக்கரியை சப்ளை செய்யும் நிறுவனத்தில் 56.7 மெட்ரிக் டன் நிலக்கரி தற்போது இருக்கிறது. அது போல் சிங்கரேணி கோலிரீஸ் நிறுவனத்தில் 4.3 மெட்ரிக் டன் நிலக்கரியும் உள்ளது.
Recommended Video

ரயில் மூலம் நிலக்கரி
மேலும் 2 மெட்ரிக் டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினம் ஒரே நாளில் இந்தியாவின் மின் தேவையானது 207.11 ஜிகா வாட்டாக இருந்தது என மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications