Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்கை வாபஸ் பெற்றால் கடன் வாங்க அனுமதி அளிக்கிறோம்.. மத்திய அரசு ஆஃபரால் சுப்ரீம் கோர்ட்டில் பரபர!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா அரசு திரும்பப் பெற்றால் கூடுதலாக கடன் வழங்கும் அனுமதியை அளிக்கத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசுக்கும், கேரள ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் வலுத்து வருவது ஒருபுறம் இருக்க கேரளாவுக்கு மத்திய பாஜக அரசு போதிய அளவு நிதி வழங்கவில்லை என்றும் தொடர்ந்து கேரள அரசு குற்றம்சாட்டி வருகிறது. தொடர்ந்து, கேரளா அரசுகும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

Will allow additional borrowing by Kerala If they withdraw case, Union govt tells Supreme Court

கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை நிகர கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. அந்த உச்ச வரம்பை கடந்த ஆண்டு ரூ.15,390 கோடியாக குறைத்தது மத்திய அரசு. ஒரு மாநிலத்தையே அழிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது என கடுமையாக குற்றம்சாட்டினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கடன் வாங்குவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு விதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. கேரளாவின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக ரூ.26 ஆயிரம் கோடி தேவை, ஆனால், மாநில அரசு நிகர கடன் திரட்ட வரம்பை விதித்துள்ளது கூட்டாட்சி அமைப்பு எதிரானது என வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மாதம் 12ஆம் தேதி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் முட்டுக்கட்டையை உடைக்க மத்திய அரசுடன் கேரளா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

அதன்படி, கடந்த வாரம், கேரள அரசின் நிதித்துறை செயலர் கே.என்.பால்கோபால், முதல்வரின் முதன்மை செயலர் கே.எம்.ஆபிரகாம், நிதித்துறை முதன்மை செயலர் ரவீந்திரகுமார் அகர்வால், அட்வகேட் ஜெனரல் கே.கோபாலகிருஷ்ண குருப் உள்ளிட்ட குழுவினருடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கட்ராமன், கூடுதல் செயலர் சஜ்ஜன் சிங் யாதவ், இணைச் செயலர் அமிதா சிங் நேகி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Will allow additional borrowing by Kerala If they withdraw case, Union govt tells Supreme Court

இந்நிலையில், நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், மத்திய அரசுடன் நடத்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு வழங்கியுள்ள நிதியை கூட கேரளாவுக்கு விடுவிக்க மத்திய அரசு ஒத்துவரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக 3.48 லட்சம் மத்திய அரசு கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் நிதி வரம்புக்குள் இருந்து கொண்டு கடன் வாங்க கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது எனத் தெரிவித்தார். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் இந்த வாதங்களை மறுத்தார்.

அதைத்தொடந்து கபில் சிபல், மத்திய அரசு முன்வைத்த நிபந்தனைகளை வாசித்தார். "கேரள அரசின் அபாய நிலை கருதி 11,700 கோடி ரூபாய் கடன் வாங்க அனுமதி வழங்க மத்திய தயாராக இருப்பதாகவும், ஆனால், மத்திய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற வேண்டும்" என்றும் மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது எனக் கூறினார்.

கேரள அரசின் வழக்கறிஞர் கபில் சிபல், என்ன நடந்து கொண்டிருக்கிறது என ஆவேசமாக கேள்வி எழுப்பி, பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நீதிமன்றமே வழக்கை விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+