அலறும் ஆம் ஆத்மி! ஜெயலலிதா, லாலு லிஸ்டில் இணையும் அரவிந்த் கெஜ்ரிவால்? கைதானால் அரசியலே மாறும்
டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் இதற்கு முன் முதல்வராக இருக்கும் போதே கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் யார் யார் என்ற லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
டெல்லி துணை முதல்வராக இருந்த எம்எல்ஏ மணீஷ் சிசோடியா கடந்த மார்ச் 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு இவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

இதில்தான் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தந்து.
அரவிந்த் கெஜ்ரிவால்: இதில்தான் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தந்து.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவிற்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை. இன்று உச்ச நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
டெல்லி மதுக் கொள்கை வழக்கில் விளக்கம் அளிக்க அமலாக்க இயக்குனரகம் (ED) முன் இன்று நேரில் ஆஜராகாமல் இருக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் ED க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்.. நீங்கள் தகள் சம்மனை திரும்பப் பெற வேண்டும், இது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) பிரச்சாரம் செய்ய மத்தியப் பிரதேசம் செல்ல கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். அவருக்கு புதிதாக ED சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளது. அல்லது சம்மனுக்கு ஆஜராகவில்லை என்று அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பின் துணை நிலை ஆளுநர் அனுமதியோடு அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
கைது வாய்ப்பு: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் இதற்கு முன் முதல்வராக இருக்கும் போதே கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் யார் யார் என்ற லிஸ்டை இங்கே பார்க்கலாம். இதற்கு முன் 4 முதல்வர்கள் ஆட்சியில் இருக்கும் போதே சிறைக்கு சென்றுள்ளனர். அதில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, டான்சி வழக்கு என்று இரண்டு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் - பீகார்: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தீவன ஊழல் வழக்கில் 2017 டிசம்பரில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 1994 மற்றும் 1996 க்கு இடையில் மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்களுக்காக அரசு கருவூலத்தில் இருந்து மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்ததாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டு ஆட்சியில் இருக்கும் போதே கைதானார்.

ஜெயலலிதா - தமிழ்நாடு: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு முன் டான்சி வழக்கிலும் அவர் இதேபோல் கைதாகி பதவியை இழந்தார்.
மதுகோடா - ஜார்கண்ட்: பல கோடி சுரங்க ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, நவம்பர் 2009ல் கைது செய்யப்பட்டார். பல்வேறு நிறுவனங்களுக்கு சுரங்க உரிமம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஓம் பிரகாஷ் சவுதாலா - ஹரியானா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு ஜனவரி 2013ல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக 3,000 ஆசிரியர்களை நியமனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பதவியையோ இழந்தார்.












Click it and Unblock the Notifications