உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா -10 கோடியே 39 லட்சம் பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,05,789 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 7,56,72,578 பேர் மீண்டுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,78,344 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,05,789 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 7,56,72,578 பேர் குணமடைந்தனர். உலகம் முழுவதும் 2,59,86,457 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 8,969 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்தனர். கடந்த ஓராண்டில் கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,46,754 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 1,14,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,99,755 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,738 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,54,047 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 25,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,30,016 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு 609 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,25,143 பேராக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 8,077,967 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,26,906 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கொரோனா தொற்று ஆளானவர்கள் எண்ணிக்கை 38,68,087 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 17,648 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 437 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் கடந்த ஓராண்டில் 73,619 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 33,18,173 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் பிரிட்டனில் 18,607 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் 38,35,783 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 406 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,564 ஆக உயர்ந்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications