உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,219,589ஆக உயர்வு.. இந்தியாவில் ஒரேநாளில் 342 பேர் தொற்றுக்கு பலி
உலக அளவில் தொற்றுக்கு 75,219,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,219,589 ஆக உயர்ந்துள்ளது.. உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவரை 1,666,949 ஆகும்.
நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,219,589 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,666,949 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,796,847 ஆக உயர்ந்துள்ள நிலையில், 20,755,793 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 17,589,405 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ரஷ்யாவில் இதுவரை 2,762,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 68,832 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.. இதுவரை அங்கு கொரோனா தொற்றுக்கு 7,111,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 99 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 26,688 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99 லட்சத்து 77 ஆயிரத்து 760 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 342 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.. 95 லட்சத்து 19 ஆயிரத்து 928 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications