கதறி அழுத சாம்பியன்கள்! கண்ணீரில் மூழ்கிய கங்கை! மல்யுத்த வீராங்கணைகளை தேற்ற கூட ஆளில்லையே! சோகம்
டெல்லி: இந்திய சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி ஹரித்வாரில் ஓடும் கங்கை ஆற்றில் பதக்கங்களை வீச மல்யுத்த வீரர், வீராங்கணைகள் குவிந்த நிலையில் அவர்கள் கதறி அழுது கண்கள் சிவந்த நிலையில் தேற்ற ஆளின்றி தவித்த சம்பவம் அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாக உள்ளார். இவர் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அதாவது மல்யுத்த வீராங்கணைகளிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரிய அளவில் சர்ச்சையானது.

மேலும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என மல்யத்த வீரர், வீராங்கணைகள் கோரிக்கைகள் வைத்து போராடினர். இதையடுத்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவின் அறிக்கை மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்தாலும் கூட பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் டெல்லி போலீசார் அவரை கைது செய்யவில்லை. இதற்கிடையே தான் கடந்த 28 ம் தேதி மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நியாயம் கேட்டு திறப்பு விழாவையொட்டி புதிய நாடாளுமன்ற செல்ல முயன்றனர். அப்போது போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கணைகளை தரதரவென இழுத்து கைது செய்தனர்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பல்வேறு விளையாட்டு வீரர்களும், மல்யுத்த வீரர், வீராங்கணைகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளனர். இருப்பினும் இந்த விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 28 ம் தேதி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கணைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தான் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் தான் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் நாங்கள் வென்ற பதக்கங்கள் மட்டும் எங்களுடன் ஏன் இருக்க வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கணைகள் கேள்வி எழுப்பினர். மேலும் தாங்கள் வென்ற பதக்கங்களை ஹரித்துவாரில் பாயும் கங்கை நதியில் இன்று வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கங்கை நதியில் பதக்கங்களை வீச பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், விஜேஷ் போகத் உள்பட பிற மல்யுத்த வீரர், வீராங்கணைகள் வந்தனர். கங்கை நிதியின் கரையோரம் அமர்ந்திருந்த வீரர், வீராங்கணைகள் அப்போது கதறி அழுதனர். தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்திலும், பதக்கங்களை ஆற்றில் வீசுவதாக கூறியும் தங்களுக்கு ஆதரவாக யாரும் வரவில்லையே என நினைத்து அவர்கள் தேம்பி தேம்பி அழுதனர். இதனால் அவர்கள் அனைவரின் கண்களும் சிவந்து போயின. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ என்பது பார்க்கும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைழக்கும் வகையில் உருக்கமாக உள்ளது.
இதற்கிடையே தான் மல்யுத்த வீரர், வீராங்கணைகளின் கைது நடவடிக்கைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மே 28ம் தேதி நமது மல்யுத்த வீரர்களை கையாண்ட விதத்தால் அதிர்ச்சியடைந்தேன். சரியான பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications