Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடிமடியிலேயே" அடிக்குதே அரசு.. பாடுபடாதது ஆர்எஸ்எஸும், பாஜகவும்தான்.. சிபிஎம் பாலகிருஷ்ணன் அட்டாக்

சிபிஎம் பாலகிருஷ்ணன் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: உணவுப்பொருள்கள் மீது போடப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது..

ஜிஎஸ்டி-யின் 47வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது... அப்போது, உணவுப்பொருட்களின் வரி உயர்த்தப்பட்டது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டது..

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஏற்கனவே பெட்ரோல் டீசல், கேஸ் விலை போன்றவற்றினால் மக்கள் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், இந்த வரி விதிப்பானது அதிர்ச்சியை தந்தது.. அதிலும் அரிசிக்கு ஜிஎஸ்டி என்பதை யாராலுமே
ஜீரணிக்க முடியவில்லை.. இதனால், உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது... உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும், அதில் பணிபுரிபவர்களும் இந்த வரி விதிப்பினால் ஏற்படும் தொழில் பாதிப்பை நினைத்து, கவலையும் வருத்தமும் அடைந்துள்ளனர்.

 எடப்பாடி அழுத்தம்

எடப்பாடி அழுத்தம்

ஓட்டலில் இட்லி, தோசை விலை உயரப்போவதாக சொல்லி உள்ளனர்.. அரிசி ஆலை ஓனர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.. இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு, திமுக அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என்று அதிமுகவின் எடப்பாடி ஏற்கனவே வலியுறுத்தியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது... இதுகுறித்து தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது:

 வயிற்றில் அடித்துவிட்டது

வயிற்றில் அடித்துவிட்டது

அடிதட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது போல அரிசிக்கு 5 சதவீதம் வரி.. இது நடைமுறையில் 10 சதவீதம் 25 வரை இருக்கும்.. மோடியின் தாக்குதல் பல கட்டமாக இருந்து வருகிறது. இதுவரை ஏராளமான தாக்குதலில் ஈடுபட்டு வந்த மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு, அடி மடியிலேயே கை வைத்துள்ளது... இதனைக் கண்டித்து, உணவுப் பொருள்கள் மீது போடப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வருகின்ற 29ம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

75 ஆவது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நேரத்தில், இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், இந்துக்கள், முஸ்லிம், சீக்கியர் என வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இணைந்து போராடி சுதந்திரத்தை பெற்றனர்.,.. இந்த விடுதலைக்காக பாடுபடாதவர்கள் என்று பார்த்தால், ஆர்எஸ்எஸ், பாஜக மட்டும் தான். எனவே விடுதலையின் பாரம்பரியத்தை கட்டி காக்க அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்...

 கட்டாயம்

கட்டாயம்

தமிழகத்தில் அரசாங்கத்தின் மீது ஏதோ ஒரு இல்லாத குறையை சொல்லி தாங்கள் ஒரு மாற்று கட்சியாக வர வேண்டுமென்ற நோக்கத்தை அண்ணாமலை செய்து வருகிறார்.-.. ஆனால் இன்னொருபக்கம் பார்த்தால், மக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு பாதிப்பை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதற்கு மத்திய அரசின் கட்டாயம் ஒரு காரணம்... மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தினால் தான், மானியம் கொடுப்போம். சொத்து வரியை உயர்த்தினால் தான், உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்குவோம் என்று சொல்லி வருகிறது..

பூஜைகள்

பூஜைகள்

மாநில அரசு மத்திய அரசு சொல்லக்கூடியவைகளை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை முடியாது என்று மறுக்க வேண்டும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் கூட, மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களின் மீதான தாக்குதலை ஏற்படுத்துகிறது என்ற நிலை ஏற்படக்கூடாது.. அரசு நிகழ்ச்சியில் இன்று பூஜைகள் நடப்பது குறித்து, தருமபுரி எம்பி செந்தில்குமார் சொல்லிய கருத்து சரியானது தான்... ஒரு அரசு என்பதே அனைத்து மக்களுக்குமான அரசுதானே.. மதசார்பற்ற அரசு... ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான எடுப்பது ஏற்புடையதல்ல" என்றார் கே.பாலகிருஷ்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+