10 வயதிலேயே எம்.பி. ஆவேன் என்று எழுதி வைத்த தருமபுரி செந்தில்குமார்! வாடகை வீட்டில் குடித்தனம்!
தருமபுரி: 10 வயதிலேயே என்றாவது ஒரு நாள் தாம் எம்.பி. ஆவேன் என்று எழுதி வைத்ததை நினைவு கூர்ந்துள்ளார் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.
அதே போல் எம்.பி. என்பதற்காக பெரிய பங்களா வீட்டில் எல்லாம் தாம் வசிக்கவில்லை என்றும் இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு செந்தில்குமார் எம்.பி. அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மருத்துவராக இருந்த போதும், அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் செந்தில்குமார் கோபமே பட்டதில்லை என்றும் அவர் அதிகமாக கூட யாரிடமும் பேசமாட்டார் எனவும் கூறிய அவரது மனைவி, அரசியல்வாதியாகி எம்.பி.ஆன பிறகு தான் இந்தளவுக்கு தனது கணவர் பேசுவாரா, கோபப்படுவாரா என்பதே தங்களுக்கு தெரியும் என்றார்.

எம்.பி. மனைவி என்று கடந்த 5 ஆண்டுகளில் யாரிடமும் தாம் சொன்னதில்லை என்றும் கோயிலுக்கு போனால் கூட வரிசையில் நின்று தான் சாமி கும்பிட்டுவிட்டு வருவேனே தவிர தனது கணவரின் பரிந்துரையை எதிர்பார்த்ததில்லை எனவும் செந்தில்குமார் எம்.பி.யின் மனைவி கூறியுள்ளார். தாம் பகுத்தறிவு வாதி என்றாலும் தனது மனைவி சாமி கும்பிடுவதை தடுத்ததில்லை என்று கூறிய செந்தில்குமார், தாம் ஒரு உணவு விரும்பி என்பதையும் ஒளிவு மறைவின்றி தெரிவித்திருந்தார்.
எந்த ஊரில் என்ன உணவு நன்றாக இருக்கும் எந்தக்கடையில் சாப்பிட வேண்டும் என்ற விவரத்தை தனது கணவர் செந்தில்குமார் எம்.பியிடம் தான் நண்பர்களும், உறவினர்களும் கேட்டுத் தெரிந்துக் கொள்வார்கள் என்றார் அவரது மனைவி சோபனா. தனது கணவர் செந்தில்குமார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றும் கல்லுரிக் காலங்களில் ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன் எனவும் கூறிய செந்தில்குமார், தாம் தொலைக்காட்சி பார்த்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் தினமும் பேப்பர் படிக்கும் பழக்கமும் தன்னிடம் கிடையாது என்றும் எல்லாமே டிஜிட்டல் என்றான பிறகு மொபைல் மூலமே எல்லாவற்றையும் படித்து அறிந்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications