11 வருடத்தில் 961 விபத்து! காவு வாங்கும் தொப்பூர்! இனி அஞ்ச வேண்டாம் - செந்தில்குமார் MP குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கடந்த 11 ஆண்டுகளில் 900க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மக்கள் இடையே இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.

விபத்து தொடர்ந்தது

விபத்து தொடர்ந்தது

தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துரையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

கடந்த 11 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 235 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கை?

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கை?

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.

உயர்மட்ட சாலை

உயர்மட்ட சாலை

அதன்படி மக்களின் கோரிக்கையை ஏற்று தொப்பூரில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான திட்டத்தை தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார் அறிவித்துள்ளார். சாலை விபத்தினை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் வளைவுகள் இருக்காது அல்லது மிக குறைவாக வளைவுகள் இருக்கும் வகையில் உயர்மட்ட சாலை போடப்பட உள்ளது. மெதுவாக செல்லும் உள்ளூர் வாகனங்கள் கீழே உள்ள சாலையை பயன்படுத்தும் வகையில் இந்த கட்டுமானம் தொடங்கப்பட உள்ளது.

எப்படி?

எப்படி?

பொதுவாக விபத்து அதிகம் நடக்கும் சாலை பகுதிகளில் இப்படி உயர் மட்ட சாலைகள் அமைக்கப்படும். ஆனாலும் தொப்பூரில் சுற்றி மலை இருப்பதால் இங்கு உயர் மட்ட சாலை அமைக்கப்படாமல் இருந்தது. தற்போது தொப்பூர் மலை சாலையில் விபத்தினை தடுக்கும் வகையில் புதிதாக elevated சாலை மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என்று எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

விரிவாக்கம்

விரிவாக்கம்

அதோடு இங்கு விபத்தை தடுக்கும் வகையில் தொப்பூர்-மேச்சேர்-மேட்டூர்-பவானி சாலை விரிவாக்கம் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று டெல்லியில் NHAI தலைவர் பிரகாஷுடன் இவர் ஆலோசனை செய்துள்ளார். பலநூறு உயிர்களை பலி வாங்கிய தொப்பூர் சாலையில் கடைசியில் ஒரு வழியாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இது இங்கு நடக்கும் சாலை விபத்துகளை மொத்தமாக குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+