ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்!
17 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஏமாற்றி உள்ளார்
திண்டுக்கல்: ரூம் போட்டு 17 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்.. கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி... பஸ் ஸ்டேண்டில் அம்போன்னு தவிக்க விட்டு போன சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். 2 மாசத்துக்கு முன்னாடி மதுரைக்கு குடும்பத்துடன் வந்தார்.

ரயிலிலேயே ஒரு இளைஞர் அறிமுகமாகி உள்ளார். பெயர் சையது இப்ராகிம் என்றும், திண்டுக்கல்லில் காலேஜ் படித்து வருவதாகவும் சொல்லி உள்ளார். ரயிலிலேயே லவ் வந்துவிட்டது. ரயிலிலேயே செல்போன் நம்பரையும் ஒருத்தருக்கொருத்தர் தந்து கொண்டனர்.
பிறகு தினந்தோறும் செல்போனில் காதல் வளர்ந்தது. எப்ப பார்த்தாலும் செல்போனில் மகள் பேசுவதையும், நடவடிக்கையையும் அறிந்த பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் கேட்கவில்லை.
இதனிடையே போன மாசம் சங்கீதாவை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த இப்ராகிம், ஒரு தனியார் இடத்தில் வைத்து ஜாலியாக இருந்திருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு செல்போனில் பேசுவது இன்னும் அதிகமாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த பெற்றோர், செல்போனை பிடுங்கி வைத்துவிட்டனர்.
இந்த விஷயத்தை இப்ராஹிடம் சொல்லிய சங்கீதா, கல்யாணம் பண்ணி கொள்ளும்படி சொல்லி அழுதுள்ளார். இதனால் இப்ராஹிம், சங்கீதாவை திண்டுக்கல்லுக்கு வருமாறு சொல்லவும், அதன்படியே சங்கீதாவும் வந்தார். திண்டுக்கல் பஸ் ஸ்டேண்டில் சங்கீதாவை நிற்க சொன்ன இப்ராஹிம், வீட்டுக்கு போய் சம்மதம் வாங்கிட்டு, திரும்பவும் வந்து கூட்டிட்டு போறேன் என்று சொல்லி விட்டு போனவர்தான்.. வரவே இல்லை..
சங்கீதா நீண்ட நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்து கொண்டே இருந்தார். ரொம்ப நேரம் ஒரு வயசு பெண் தனியாக நிற்கவும், பஸ் ஸ்டேண்டில் சுற்றி திரியும் சிலர் அவளை தப்பாக நினைத்துவிட்டு, விபச்சாரத்துக்கும் அழைத்துள்ளனர். இதனால் பஸ் ஸ்டேண்டிலேயே கதறி அழுதுள்ளார் சங்கீதா.
பிறகு அங்கிருக்கும் கடைக்காரர்கள் என்ன ஏதென்று சங்கீதாவிடம் விசாரிக்கவும்தான் விஷயத்தை சொல்லி தேம்பி தேம்பி அழுதார். இதையடுத்து, திண்டுக்கல் மகளிர் ஸ்டேஷனில் கொண்டுபோய் சங்கீதாவை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இப்போது விசாரணை நடக்கிறது!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications